For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இந்தியாவின் அடுத்த தோனி, கோலி?”.. U-19 உலகக்கோப்பை ஜொலிக்கும் சிங்கங்கள்.. நீங்கள் அறிவீர்களா?

பார்படாஸ்: விராட் கோலி, ஜடேஜா, வில்லியம்சன், பட்லர், ஸ்மித் என இன்றைய கிரிக்கெட் உலகை ஆட்சி செய்யும் அனைவரும், ஒரு காலத்தில் U-19 உலகக் கோப்பை தொடரில் விளையாடியவர்கள் தான்

இந்த நிலையில் அடுத்த தலைமுறை ஹீரோக்களை அடையாளப்படுத்த கூடிய U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்குகிறது.

இந்த தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் யார் நாளைய நட்சத்திரங்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை தற்போது காணலாம்.

“கொஞ்சம் கூட அது இல்லையா??” விராட் கோலியின் தரக்குறைவான செயல்.. விட்டு விளாசிய கவுதம் கம்பீர்! “கொஞ்சம் கூட அது இல்லையா??” விராட் கோலியின் தரக்குறைவான செயல்.. விட்டு விளாசிய கவுதம் கம்பீர்!

யாஷ் துல்

யாஷ் துல்

இந்திய U-19 அணியின் கேப்டனாக களமிறங்குகிறார் டெல்லியை சேர்ந்த யாஷ் துல், டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் இவரை அடுத்த விராட் கோலி என்று தான் அழைப்பார்களாம். தற்போது விராட் கோலி போல் இவரும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த U-19 ஆசிய கோப்பை போட்டியில் துல் , பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும் , பயிற்சி ஆட்டத்தில் இரண்டு அரைசதம் விளாசியுள்ளார்.

ஹங்கேர்கர்

ஹங்கேர்கர்

இந்திய U-19 அணியில் ஆல் ரவுண்டராக இடம்பெற்றுள்ள ஹங்கேர்கர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். மகாராஷ்டிராவுக்காக சீனியர் கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ள இவர், அடுத்த ஹர்திக் பாண்டியா என்றே அவரை தெரிந்தவர்கள் அழைக்கின்றனர். ஹங்கேர்கர் பற்றி நாம் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளோம். நல்ல வேகத்தில் பந்துவீசக்கூடிய இவர், பேட்டிங்கில் அதிரடியாக ஆடவும் செய்வார். நடந்து முடிந்த U-19 ஆசிய கோப்பை போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஹர்னூர் சிங்

ஹர்னூர் சிங்

இடதுகை தொடக்க ஆட்டக்காரரான ஹர்னூர் சிங்,தற்போதே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். U-19 ஆசிய கோப்பை போட்டியில் 251 ரன்களை விளாசிய ஹர்னூர் சிங், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசினார். இதனால் இவரது தொடக்கம் அணிக்கு மிகவும் முக்கியம் என கருதப்படுகிறது.

ஷாயிக் ரஷித்

ஷாயிக் ரஷித்

நடப்பு அணியின் துணை கேப்டனாக விளங்கும் ஷாயிக் ரஷித் ஆந்திராவை சேர்ந்தவர். இதனாலேயே இவர் அடுத்த அசாரூதீன் என்று சக வீரர்கள் அழைக்கின்றனர். நடுவரிசையில் களமிறங்க கூடிய ரஷித், அணியின் ஸ்கோரை பொறுப்பாக உயர்த்துவதில் வல்லவர். . U-19 ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக 90 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 72 ரன்களும் எடுத்து உள்ளார்.

Recommended Video

இனி எல்லாம் இப்படி தான்.. உலக அளவில் Famous ஆன CSK மற்றும் RCB
ராஜ் பவா

ராஜ் பவா

ஆல் ரவுண்டர் ராஜ் பவாவும் பேட்டிங், மிதமான வேகப்பந்துவீச்சு என கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ரவிகுமார் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா நாளை முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 4 முறை U-19 உலகக் கோப்பை சாம்பியனான இந்தியா இம்முறை உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

Story first published: Friday, January 14, 2022, 17:37 [IST]
Other articles published on Jan 14, 2022
English summary
ICC U-19 World cup 5 Future star of Indian cricketers who playing in U19 India team“இந்தியாவின் அடுத்த தோனி, கோலி?”.. U-19 உலகக்கோப்பை ஜொலிக்கும் சிங்கங்கள்.. நீங்கள் அறிவீர்களா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X