For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

U19 உலகக்கோப்பை: “இது ஆரம்பம் தான் கண்ணா” அஸ்வின் போட்ட ஒற்றை ட்வீட்.. U19 இந்திய வீரர்கள் படு குஷி

ஆண்டிகுவா: U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிச் சுற்றுக்கு 8வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

Recommended Video

U19 World Cup Semi Final-ல் Virat Kohli-ன் சாதனையை சமன் செய்த Yash Dhull

அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதியது. போட்டி நடைபெற்ற மைதானத்தில் எந்த அணியும் இந்த தொடரில் 200 ரன்களை எட்டியது இல்லை.

ஆனால் இந்திய அணி 290 ரன்களை எட்டி மற்ற அணிகளை மெர்சல் ஆக்கியது. குறிப்பாக கொரோனா பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட இந்திய வீரர்கள் தடையை மீறி சாதனை படைத்துள்ளனர்.

“கடந்த வாரம் கொரோனா - இன்று 200 ரன்கள்” இந்திய அணியை மீட்ட 2 ஃபீனிக்ஸ் பறவைகள்..ரசிகர்கள் சிலிர்ப்பு“கடந்த வாரம் கொரோனா - இன்று 200 ரன்கள்” இந்திய அணியை மீட்ட 2 ஃபீனிக்ஸ் பறவைகள்..ரசிகர்கள் சிலிர்ப்பு

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் மற்றும் துணை கேப்டன் ரஷித், சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 204 ரன்களை சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. சிறப்பாக விளையாடிய யாஷ் துல் சதம் விளாசினார். ரஷித் 94 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியின் ஷாட் தேர்வுகள் பல்வேறு சர்வதேச வீரர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அஸ்வின் பாராட்டு

அஸ்வின் பாராட்டு

அண்டர் 19 வீரர்களை பாராட்டிய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், யாஷ் துல் முதல் சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இது மிகப் பெரிய சாதனை பயணத்தின் தொடக்கமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார். இதே போன்று ரஷித் ஆட்டத்தை பார்த்து பிரமித்து போய் இருப்பதை உணர்த்தும் வகையில் ஸ்மைலி போட்டு வாழ்த்தியுள்ளார்.

மைக்கேல் வாகன்

மைக்கேல் வாகன்

இதே போன்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்தியாவின் பேட்டிங் அற்புதமாக உள்ளதாக பாராட்டினார். மேலும் யாஷ் துல், ரஷித் போன்ற வீரர்கள் இருப்பதால் இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளதாக மைக்கேல் வாகன் குறிப்பிட்டார். இந்தியா, இங்கிலாந்து இறுதிப் போட்டியை காண ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பயிற்சியாளர் கணித்கர்

பயிற்சியாளர் கணித்கர்

U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படும் கணிட்கர், யாஷ் துல் ஒரு அனுபவ வீரர் போல் விளையாடுவதாக பாராட்டினார். அணி சிக்கலில் இருக்கும் போது எப்படி விளையாட வேண்டும் என்று யாஷ் துல்லுக்கு தெரிந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அனுபவம் கிடைக்க கிடைக்க, அவர் மேலும் சிறப்பாக தான் ஜொலிப்பார் என்று பாராட்டு தெரிவித்தார்.

Story first published: Thursday, February 3, 2022, 14:24 [IST]
Other articles published on Feb 3, 2022
English summary
ICC U-19 World cup India stunning win in semifinal Reaction from the world இது ஆரம்பம் தான்..!! எதிர்காலம் சிறப்பாக இருக்கு..!! பாராட்டு மழையில் U-19 இந்திய வீரர்கள்..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X