For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

111 ரன்களில் சுருண்டது வங்கதேசம்..நடப்பு சாம்பியனை ஓட விட்ட இந்தியா..!! U-19 உலகக் கோப்பை கிரிக்கெட்

ஆண்டிகுவா: U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது.

Recommended Video

U-19 World Cup : Bangladesh-ஐ வீழ்த்தி Semi Final-க்கு தகுதி பெற்றது India

காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்கதேசத்தை இந்திய அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

கடந்த அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பழித் தீர்க்கும் விதமாக இந்திய வீரர்கள் செயல்பட்டனர்.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

இந்திய வீரர்களின் துல்லியமான வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச வீரர்கள் தினறினர். வங்கதேச வீரர்கள் சுவாசிக்க கூட இந்திய பந்துவீச்சாளர்கள் நேரம் தராமல் நெருக்கடியை தந்தனர்.வங்கதேச வரர்கள் இஸ்லாம் 2 ரன்களில் , ஹூசைன் 1 ரன்னிலும்,பிரான்டிக் நபி 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

111 ரன்களில் ஆல்அவுட்

111 ரன்களில் ஆல்அவுட்

ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 37 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஃபஹிம் டக் அவுட்டாகியும், கேப்டன் ரகிபுல் ஹசன் 7 ரன்களிலும் வெளியேறினர். இறுதியில் மெகருப் மட்டும் தாக்கு பிடித்து அதிகபட்சமாக 30 ரன்கள் சேர்க்க, வங்கதேச அணி 111 ரன்களில் சுருண்டது. இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் ரவிகுமார் 3 விக்கெட்டுகளையும், ஆஸ்ட்வால் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஹர்னூர் சிங் டக் அவுட்டாக, தொடக்க வீரர் ஆங்கிரிஷ் 44 ரன்கள் சேர்த்தார் துணை கேப்டன் ரஷித் 26 ரன்களும், கேப்டன் யாஷ் துல் 20 ரன்களும் சேர்த்தனர்.

அரையிறுதி சுற்று

அரையிறுதி சுற்று

இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து 20 ஓவர்கள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இன்னொரு அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

Story first published: Sunday, January 30, 2022, 10:50 [IST]
Other articles published on Jan 30, 2022
English summary
ICC U-19 World cup quarter final India beat Defending champion Bangladesh111 ரன்களில் சுருண்டது வங்கதேசம்..நடப்பு சாம்பியனை ஓட விட்ட இந்தியா..!! U-19 உலகக் கோப்பை கிரிக்கெட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X