134 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இலங்கை அணி தோல்வி..!! கெத்து காட்டிய ஆப்கானிஸ்தான்..!! #U-19WC

ஆன்டிகுவா: ஐ.சி.சி. U19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது.

ஆன்டிகுவாவில் நடைபெற்ற 3வது காலிறுதி ஆட்டத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதின.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பிலால் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்

ஐ.சி.சி. விருதுகளில் பாகிஸ்தான் ஆதிக்கம்..!! இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய ஸ்மிருதி மந்தானா..!!ஐ.சி.சி. விருதுகளில் பாகிஸ்தான் ஆதிக்கம்..!! இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய ஸ்மிருதி மந்தானா..!!

134 ரன்களுக்கு சுருண்டது

134 ரன்களுக்கு சுருண்டது

அல்லாஹ் நூர் 25 ரன்களிலும், கரோத்தே 13 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.கேப்டன் சுலைமான் 1 ரன்னிலும்,இஜாஸ் அகமது டக் அவுட்டாகியும் வெளியேறினர்,அதிகபட்சமாக ஆப்கான் அணியில் அப்துல் 37 ரன்களிலும்,நூர் அகமது 30 ரன்களிலும் எடுக்க,ஆப்கானிஸ்தான் அணி 134 ரன்களுக்கு சுருண்டது

அணிவகுப்பு

அணிவகுப்பு

இலங்கை வீரர் வினுஜா 10 ரன்களை விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.தொடக்க வீரர் விக்ரமசிங்கே 16 ரன்களில் ரன் அவுட்டாக, மற்ற வீரர்களும் பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர்

இலங்கை 43/7

இலங்கை 43/7

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 43 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெல்லகல்வே மற்றும் ரவீன் டி சில்வா, 69 ரன்கள் சேர்க்க, இலங்கை அணி வெற்றி நோக்கி சென்றது. இந்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்

ஆப்கான் வெற்றி

ஆப்கான் வெற்றி

கடைசி ஒரு விக்கெட் இருக்க 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டிராவின் மேத்தீவ் ரன் அவுட்டாக இலங்கை அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC U-19 Worldcup Afghanistan beat srilanka and qualifies for semifinal134 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இலங்கை அணி தோல்வி..!! கெத்து காட்டிய ஆப்கானிஸ்தான்..!! #U-19WC
Story first published: Friday, January 28, 2022, 17:10 [IST]
Other articles published on Jan 28, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X