For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி

டர்பன் : மகளிருக்கான 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

 ICC U19 Womens world cup - India restricted srilanka in to 59 runs

டி20 போட்டியாக நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய மகளிர் அணி ஆக்ரோஷமாக செயல்பட்டனர்.

இதனால் இலங்கை அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

அதிகபட்சமாக இலங்கை அணியின் விஷ்மி குனரத்னே 25 ரன்களும் உமையா 13 ரன்களும் எடுக்க மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இலங்கை அணி 59 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

சச்சின் மகன் அர்ஜூன் தான் லக்கி..சிறு வயதில் புலம்பிய சர்பிராஸ் கான்..பிறகு உண்மையை புரிஞ்சிகிட்டாரு சச்சின் மகன் அர்ஜூன் தான் லக்கி..சிறு வயதில் புலம்பிய சர்பிராஸ் கான்..பிறகு உண்மையை புரிஞ்சிகிட்டாரு

இந்திய வீராங்கனை வர்ஷா சோப்ரா ஐந்து ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினர். சிபாலி வர்மா 15 ரன்களிலும், ஸ்வேதா 13 ரன்களையும் ஆட்டம் இழக்க கடைசிவரை விளையாடிய சௌமியா 28 ரன்கள் சேர்த்தார்.

இதை அடுத்து இந்திய மகளிர் அணி 7.2 ஓவரில் வெற்றி இலக்கை மூன்று விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று ஆட்டத்தில் வென்று ஒரு ஆட்டத்தில் தோல்வி தழுவி குரூப் ஒன் பிரிவில் முதல் இடத்தில் இருக்கிறது.

Story first published: Sunday, January 22, 2023, 23:49 [IST]
Other articles published on Jan 22, 2023
English summary
ICC U19 Womens world cup - India restricted srilanka in to 59 runs U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X