For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.சி.சி. U19 உலககோப்பை அரையிறுதி- ஆஸி.யை சமாளிக்குமா இந்திய அணி..!! ரன்குவிக்க இந்தியா தீவிரம்..!!

ஆண்டிகுவா: U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் யாஷ் துல் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். கொரோனாவிலிருந்து மிண்ட ஹரி நிஷாந்த் இந்திய அணிக்கு திரும்பினார்.

ICC u19 world cup semi final india won the toss and choose to bat

தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆங்கிரிஷ் மற்றும் ஹர்னூர் சிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆடுகளம் தொய்வாக காணப்படுகிறது. பேட்டிற்கு பந்து மெதுவாக வருகிறது. பவுண்ஸ் மற்றும் ஸ்விங்கும் காணப்படவில்லை. இதனால் இந்திய அணி வீரர்கள் முதல் 10 ஓவரில் விக்கெட் விழாமல் பார்த்து கொண்டு பந்தை பழசாக்கிவிட்டு பின்னர் பேட்டிங்கில் அதிரடியை காட்டலாம் என்ற திட்டத்தில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். நல்ல பார்மில் இருந் ஆங்கிரிஷ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதலில் விளையாடும் இந்திய அணி 250 ரன்களை தாண்டினாலே ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி அளிக்க முடியும். இந்திய அணியிலும் விக்கி ஷஸ்ட்வால், ஹரி நிஷாந்த் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு சிரமத்தை உண்டாக்கலாம்.

Recommended Video

India வீரர்களுக்கு கொரோனா பரவ BCCI காரணம்? விளாசும் ரசிகர்கள் | Oneindia Tamil

இருப்பினும் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களும் நல்ல பார்மில் உள்ளனர். குறிப்பாக தொடக்க வீரர் டியாகு வெய்லி, 2 அரைசதம் மற்றும் ஒரு சதம் அடித்து நல்ல பார்மில் உள்ளார். இதே போன்று கேம்ப்பேள், கோரி மில்லர், கூப்பர் ஆகியோரும் அதிரடியாக ஆட கூடியவர்கள். இதனால் இந்திய அணி வீரர்கள் ஆஸி. அணியை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.

Story first published: Wednesday, February 2, 2022, 19:15 [IST]
Other articles published on Feb 2, 2022
English summary
ICC u19 world cup semi final india won the toss and choose to bat ஐ.சி.சி. U19 உலககோப்பை அரையிறுதி- ஆஸி.யை சமாளிக்குமா இந்திய அணி..!! ரன்குவிக்க இந்தியா தீவிரம்..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X