For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு கேட்சால் மாறிய ஆட்டம்..!! இந்தியாவுக்கு உதவிய இயற்கை..! இங்கிலாந்து செய்த தவறு.. U-19 IND vs ENG

ஆண்டிகுவா: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை இந்திய அணி 5வது முறையாக வென்றது. இதில் இந்திய அணி பல தடைகளை கடந்து தான் சாதனை படைத்தது.

தொடரின் நடுவிலேயே இந்திய வீரர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அணியில் எஞ்சி இருந்த வீரர்களை வைத்து தான் இந்தியா விளையாடி பைனல் வரை வந்தது.

கேப்டன் யாஷ் துல் அரையிறுதியில் தான் குணமடைந்து இந்திய அணிக்கு வந்தார். தடைகளை உடைத்ததால் என்னவோ, அந்த இயற்கையே இந்திய அணிக்கு உதவியது.

இரவில் மழை

இரவில் மழை

இறுதிப் போட்டி நடைபெற்ற விவயன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் தயாரிக்கப்பட்டது. 2 நாட்களுக்கு அங்கு நடந்த போட்டியில் ஒரே இன்னிங்சில் 350 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது.இதனால் டாஸ் வென்ற இங்கிலாந்த அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியும் பேட்டிங் செய்வதாக தான் இருந்தது. ஆனால் நேற்று இரவிலிருந்து காலை வரை ஆண்டிகுவாவில் கன மழை பெய்துள்ளது.

காப்பற்றப்பட்ட இந்தியா

காப்பற்றப்பட்ட இந்தியா

இதனால் ஆடுகளத்தின் ஈரப்பதம் கொஞ்சம் இருந்ததால் முதலில் பந்துவீசிய இந்திய அணி, அதனை நன்கு பயன்படுத்தி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதனால் அப்போதே இந்தியாவின் வெற்றி தொடக்கமானது. ஒரு வேலை, இந்தியா முதலில் பேட் செய்து இருந்தால், இதே நிலை தான் ஏற்பட்டு இருக்கும். இதனால் இயற்கை தான் காப்பாற்றியது.

அபார கேட்ச்

அபார கேட்ச்

இங்கிலாந்து அணி சரிவை கண்டாலும், 8 வது விக்கெட்டுக்கு அந்த அணி 93 ரன்களை சேர்த்தது. பொறுப்பாக விளையாடிய ஜேம்ஸ் ரூவ் பெரிய இலக்கை குவிப்பதற்காக அதிரடியாக ஆடினார். ஆனால் 95 ரன்கள் எடுத்த போது, அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கௌசல் தாம்பே தவறவிட்டு, பின்னர் 2வது முயற்சியில் பாய்ந்து அபாரமாக பிடித்தார்.இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து தவறு

இங்கிலாந்து தவறு

ஒரு வேலை, அவர் கேட்ச் விட்டு இருந்தால் இங்கிலாந்து 220 ரன்களை தொட்டு இருக்கும், அதனை துரத்த இந்தியாவும் சிரமப்பட்டு இருக்கும். இதே போன்று இங்கிலாந்து அணி இந்தியாவின் விக்கெட்டுகளை முக்கிய கட்டத்தில் எடுத்தாலும், சுழற்பந்துவீச்சாளர்கள் விசும் போது சிலிப்பில் ஃபில்டரை நிறுத்த தவறியது. இதனால் 2 ராஜ் பவா, நிஷாந்த் சிலிப்பில் கொடுத்த கேட்ச் வாய்ப்பு பவுண்டரிகளாக சென்றது.

Recommended Video

IND vs SL : Rohit Sharma opens up about new role for Ravindra Jadeja | Oneindia Tamil
கவாஸ்கர் சூனியம்

கவாஸ்கர் சூனியம்

போட்டியின் போது வர்ணனையாளராக இருந்த ரோகன் கவாஸ்கர், இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் இந்த தொடரில் டக் அவுட்டே ஆகவில்லை என்று கூற, அடுத்த பந்திலேயே இங்கிலாந்து கேப்டன் டாம் பிரீஸ்ட் டக் அவுட்டானார். இதனால் மற்ற கமெண்டேடர்கள், ரோகன் கவாஸ்கரை வார்த்தையால் சூனியம் வைத்துவிட்டதாக கேலி செய்தனர்.

Story first published: Sunday, February 6, 2022, 7:07 [IST]
Other articles published on Feb 6, 2022
English summary
ICC U19 World cup Turnung Points in India vs England Final 2022 ஒரு கேட்சால் மாறிய ஆட்டம்..!! இந்தியாவுக்கு உதவிய இயற்கை..! இங்கிலாந்து செய்த தவறு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X