For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து எளிதில் வெற்றி

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

By Devarajan

டவுன்டான்: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் நடந்து வரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த 16-வது லீக்கில் நியூசிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் 43 ஓவர்களில் 150 ரன்னில் சுருண்டது.

ICC Women’s World Cup 2017: New Zealand win

தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் சுசி பேட்ஸ் 40 ரன்களும், விக்கெட் கீப்பர் ராச்சல் பிரைஸ்ட் 90 ரன்களும் எடுத்தார். அதில் 55 பந்தில் 17 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் விளாசினர். 4-வது ஆட்டத்தில் ஆடிய நியூசிலாந்துக்கு இது 2-வது வெற்றியாகும். ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்ட வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.

போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளைய ஆட்டங்களில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து-பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

Story first published: Friday, July 7, 2017, 11:16 [IST]
Other articles published on Jul 7, 2017
English summary
New Zealand team defeated West Indies square in a league phase match at the ICC Women’s World Cup 2017.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X