மகளிர் உலககோப்பையில் இந்தியா அசத்தல்- 2 இந்திய வீராங்கனைகள் சதம்.. உலக சாதனை படைத்த கோஸ்வாமி

ஹாமில்டன்: மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஹாமில்டன் நகரில் இந்தியா தனது 3வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனையடுத்து ஸ்மிருதி மந்தானா, யாஷ்திகா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.

ஜடேஜாவின் உலக சாதனையை தடுத்த அஸ்வின்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா.. 3 நாளில் முடிந்த ஆட்டம்ஜடேஜாவின் உலக சாதனையை தடுத்த அஸ்வின்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா.. 3 நாளில் முடிந்த ஆட்டம்

தொடக்கம் முதலே இரு வீராங்கனைகளும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். யாஷ்திகா 6 பவுண்டரிகளை விளாசி 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

கேப்டன் மித்தாலி ராஜ் 5 ரன்களிலும், தீப்தி சர்மா 15 ரன்களும் வெளியேறினார். இதனையடுத்து ஸ்மிருதி மந்தானாவுடன் ஜோடி சேர்ந்த ஹர்மன்பிரித் கவுர் , பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஒரு கட்டத்துக்கு பிறகு இருவரும் அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.

அடுத்தடுத்து சதம்

அடுத்தடுத்து சதம்

இருவரும் அடுத்தடுத்து சதம் விளாச, இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 123 ரன்கள் சேர்த்தார். ஹர்மன்பிரித் கவுர் 109 ரன்கள் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலககோப்பையில் 8 விக்கெட் 317 ரன்கள் சேர்த்தது.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் களமிறங்கினர். தொடக்க ஜோடி தோத்தின், மேத்தியூஸ் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. தோத்தின் 62 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் சீட்டுக்கட்டு போல் சரிந்தது.

சரிந்த விக்கெட்டுகள்

சரிந்த விக்கெட்டுகள்

அடுத்த 34 ரன்கள் சேர்ப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. அனிஷா விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கோஸ்வாமி, உலககோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். 40வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 162 ரன்களுக்கு சுருண்டது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC Womens world cup 2022 – India thrash West indies women by 155 runs மகளிர் உலககோப்பையில் இந்தியா அசத்தல்- 2 இந்திய வீராங்கனைகள் சதம்.. உலக சாதனை படைத்த கோஸ்வாமி
Story first published: Saturday, March 12, 2022, 16:24 [IST]
Other articles published on Mar 12, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X