For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதெப்படி இருக்கு.. இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு!

By Veera Kumar

லாகூர்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி லாகூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற பாகிஸ்தான் அணி, அடுத்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 150 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

பாகிஸ்தானுக்கு நெருக்கடி

பாகிஸ்தானுக்கு நெருக்கடி

அடுத்தடுத்த, இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருப்பதால் பாகிஸ்தான் அணி பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்களில் குறைந்தது 3ல் வெற்றி பெற்றால் தான் கால் இறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

வாசிம் அக்ரம் எச்சரிக்கை

வாசிம் அக்ரம் எச்சரிக்கை

இரண்டு போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியினை ரசிகர்கள் பெரிதும் விமர்சித்து வருகின்றனர். முன்னாள் வீரர்களும் அணியை திட்டி தீர்க்கின்றனர். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுங்கள் அல்லது நாட்டுக்கு திரும்பிவிடுங்கள் பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அசிங்கப்படுத்திய அக்தர்

அசிங்கப்படுத்திய அக்தர்

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஷ்பா உல் ஹக் ஒரு கோழை என்று சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது வேறயா..

இது வேறயா..

இந்த அமர்க்களங்களுக்கு மத்தியில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி பாகிஸ்தானில் கோர்ட்டில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது.

பிரதமரும் பதில் சொல்லனுமாம்

பிரதமரும் பதில் சொல்லனுமாம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் அகமத் கான் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உறுப்பினர் நஜாம் சேத் ஆகியோர் பதில் அளிக்க மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரிஸ்வான் குல் என்பவர் லாகூர் ஐகோர்ட்டில், பாகிஸ்தான் அணியின் மோசமான விளையாட்டு தொடர்பாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

விசாரணை தேவை

விசாரணை தேவை

இம்மனுவை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்ன? என்பதை விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை சூதாட்ட புக்கிகளிடம் பாகிஸ்தான் வீரர்கள் சிக்கியிருக்க கூடுமோ என்ற சந்தேகத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Story first published: Wednesday, February 25, 2015, 9:55 [IST]
Other articles published on Feb 25, 2015
English summary
In a shocking development following ICC World Cup 2015 matches, cricket team of Pakistan have been dragged to court. Following a petition, the Lahore High Court (LHC) on Monday, Feb 23 sent a court notice to the team. Cricketers of the team might be grilled for their "poor performance" in the ongoing World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X