For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்கேன் எடுக்கணும்.. விளையாடாதீங்க.. 145 கிமீ வேகத்தில் தலையில் பட்ட பந்து.. ஆப்கான் வீரர் காயம்!

நேற்று நடந்த இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹசமத்துல்லா ஷாகிதி தலையில் பந்து பட்டு காயம் அடைந்தார்.

Recommended Video

WORLD CUP 2019: ENG VS AFG: மார்க் வுட் வீசிய பந்து.. ஆப்கான் வீரர் காயம்!- வீடியோ

லண்டன்: நேற்று நடந்த இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹசமத்துல்லா ஷாகிதி தலையில் பந்து பட்டு காயம் அடைந்தார். நேற்று இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக பல்வேறு திருப்பங்களுடன் நடந்து வருகிறது. அதன் ஒருகட்டமாக நேற்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடியது.

 எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் எடுத்தது. அதற்கு அடுத்து இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தொடக்கத்தில் இருந்தே திணறியது. அப்படி இப்படி அடித்து ஆடி கடைசியாக 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்த போது இங்கிலாந்து வீரர் மார்க் வுட் 30வது ஓவரை வீசினார். அப்போது ஆப்கானிஸ்தான் வீரர் ஹசமத்துல்லா ஷாகிதி பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். ஹசமத்துல்லா அப்போது 24 ரன்கள் எடுத்து இருந்தார். யார்க்கர் போட முயற்சி செய்த வுட், தவறி லோ புல் டாஸ் பந்து போட்டார்.

 செம அடி

செம அடி

இந்த பந்து 145 கிமீ வேகத்தில் வந்தது. நேரடியாக சென்ற பந்து ஹசமத்துல்லா தலையில் நங்கென்று விழுந்தது. பந்து பட்டதும் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். உடனே மருத்துவர்கள் வந்து அவரை சோதனை செய்தனர். அவர் அதற்கு மேல் விளையாட முடியாது என்று கூறினார்கள். உடனே ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார்கள்.

 ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஹசமத்துல்லா அதை கேட்காமல் தொடர்ந்து விளையாடினார். மார்க் வுட் இந்த சம்பவத்தை பார்த்து பதறிப்போனார். அதன்பின் காயத்துடன் ஆடிய ஹசமத்துல்லா 100 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அவுட்டானார். தற்போது இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று கிரிக்கெட் போட்டியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

Story first published: Wednesday, June 19, 2019, 9:42 [IST]
Other articles published on Jun 19, 2019
English summary
ICC World Cup 2019: Afghanistan player injured in the match against England after a deadly full toss.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X