For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் அதைத்தான் அணிவார்.. தோனிக்காக ஐசிசியிடம் வாதம் செய்த பிசிசிஐ.. அடுத்து என்ன நடக்கும்?

இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் போர்ட் பிசிசிஐ களமிறங்கி உள்ளது. பிசிசிஐ தற்போது ஐசிசிக்கு எதிராக களமிறங்கி இருக்கிறது.

லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் போர்ட் பிசிசிஐ களமிறங்கி உள்ளது. பிசிசிஐ தற்போது ஐசிசிக்கு எதிராக களமிறங்கி இருக்கிறது.

உலகக் கோப்பை போட்டி சர்ச்சை இல்லாமல் அமைதியாக நடந்து வந்தது. பெரிய அளவில் இந்த போட்டி குறித்த புகார்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. போட்டியிலும் பெரிய அளவில் விறுவிறுப்பு இல்லாமல் இருந்தது.

ஆனால் நேற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் நடுவர்கள் பாரபட்சமாக ஆடியதாக புகார் வந்தது. இது சர்ச்சை ஆனது. அதேபோல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணியின் கீப்பர் தோனி அணிந்திருந்த கிளவுசும் பெரிய சர்ச்சை ஆனது.

கோலி சொன்ன அந்த வார்த்தைகள்.. மனதை மாற்றிய டி வில்லியர்ஸ்.. பின்னணியில் நடந்தது இதுதான்! கோலி சொன்ன அந்த வார்த்தைகள்.. மனதை மாற்றிய டி வில்லியர்ஸ்.. பின்னணியில் நடந்தது இதுதான்!

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

தோனி தற்போது மிலிட்டரி உடை மாடலில் ஒரு கிளவுஸ் அணிந்து வருகிறார். இதன் வெளிப்பக்கம் பச்சை நிறத்தில் இருக்கும். இதில் பாலிடான் பேட்ச் என்ற முத்திரை உள்ளது. இது இந்திய ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவின் முத்திரை ஆகும். இதன் உள்பக்கம் மிலிட்டரி ஆடை போல டிசைன் செய்யப்பட்டு இருக்கும். இவரின் இந்த கிளவுஸ் மிகவும் புகழ்பெற்றது.

ஏன் வைரல்

ஏன் வைரல்

இந்த பாலிடான் பேட்ச் சென்ற மேட்சில் பெரிய வைரலானது. இந்த பேட்சை அணிந்துதான் தோனி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியை விளையாடினார். தோனி தற்போது இந்திய ராணுவத்தின் பாராசூட் படையில் லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். இதில் அவர் செய்த பயிற்சியின் காரணமாக இந்த பேட்ச் வழங்கப்பட்டது.

தடை விதித்தது

தடை விதித்தது

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோனி இப்படி பேட்ச் உள்ள கிளவுஸை அணிய கூடாது என்று ஐசிசி தடை போட்டது. தோனியின் இந்த செயல் விதிமுறைக்கு எதிரானது கூறி என்று ஐசிசி இந்த தடையை விதித்தது. ஒரு குறிப்பிட்ட ராணுவம், மதம், பிரிவினை, இதை குறிக்கும் வகையில் ஆடை அணிய கூடாது என்ற விதியை குறிப்பிட்டு தோனியின் கிளவுஸிற்கு தடை விதித்தது.

 எதிர்ப்பு தெரிவித்தது

எதிர்ப்பு தெரிவித்தது

ஆனால் ஐசிசியின் இந்த முடிவிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதற்காக டிவிட்டரில் #DhoniKeepTheGlove என்ற டேக்கை வைரலாக்கி வருகிறார்கள். அதேபோல் இதற்கு பிசிசிஐயும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தோனிக்கு ஆதரவாக பிசிசிஐ இந்த முறை நிலைப்பாடு எடுத்துள்ளது.

என்ன செய்ய போகிறார்கள்

என்ன செய்ய போகிறார்கள்

அதன்படி இது தொடர்பாக பிசிசிஐ தற்போது ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது. ஐசிசி விதியின்படி, ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் இது போன்ற சின்னங்களை தங்கள் கிளவுஸில் வீரர்கள் பயன்படுத்த முடியும். இதை சுட்டிக்காட்டி, பிசிசிஐ, தோனிக்கு நாங்கள் அனுமதி வழங்கி இருக்கிறோம் அதனால், அவரது கிளவுஸிற்கு தடை விதிக்க கூடாது என்று சொல்லி இருக்கிறது. இதனால் அடுத்த போட்டியிலும் தோனி பெரும்பாலும் இதே கிளவுசுடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, June 7, 2019, 14:40 [IST]
Other articles published on Jun 7, 2019
English summary
ICC World Cup 2019: BCCI backs Dhoni, takes stand against ICC on Glove batch controversy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X