For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி ஒரு கேட்சை பார்த்து இருக்கிறீர்களா? ஒரு டைவ்.. பறந்து கேட்ச் செய்த ஸ்டோக்ஸ்.. வாவ் வீடியோ!

நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் பெரிய வைரலாகி உள்ளது.

Recommended Video

WC 2019: Ben Stokes Unbelievable catch: ஒரு டைவ்.. பறந்து கேட்ச் செய்த ஸ்டோக்ஸ்.. வாவ் வீடியோ!

லண்டன்: நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் பெரிய வைரலாகி உள்ளது.

நேற்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கியது. முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடந்தது.

நேற்று நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அதேபோல் இறுதியில் எளிதாக தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

அவர் பட்டினியில் விளையாட வந்திருக்கிறார்.. கவனமாக இருங்கள்.. அதிர வைத்த ஜோஃப்ரா ஆர்ச்சர் பவுலிங்! அவர் பட்டினியில் விளையாட வந்திருக்கிறார்.. கவனமாக இருங்கள்.. அதிர வைத்த ஜோஃப்ரா ஆர்ச்சர் பவுலிங்!

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அதிரடியாக ஆடியது. ஆனாலும் சரியான இடைவெளியில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. தென்னாப்பிரிக்க பவுலர்கள் ரன் கொடுத்தாலும் அவ்வப்போது பார்ட்னர்ஷிப்பை உடைத்து விக்கெட்டுகளை எடுத்து வந்தனர்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

இந்த நிலையில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 311 ரன்களை எடுத்தது. ஜேசன் ராய், ரூட், மார்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அரை சதங்களை கடந்தனர். அதன்பின் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி மிக மோசமாக திணறியது. தொடக்கத்தில் இருந்தே அந்த அணி மோசமாக திணறி திணறி விளையாடியது.

ஏன் ஆடினார்கள்

ஏன் ஆடினார்கள்

அந்த அணியில் டீ காக் மற்றும் டெர் டுசென் மட்டும் அரை சதம் கடந்து அணிக்கு நம்பிக்கை வழங்கினார்கள். ஆனால் அவர்களும் சதம் அடிக்க முடியாமல் வெளியேறினார்கள். இதனால் அந்த அணி 250 ரன்களை தாண்ட கூட முடியாத மோசமான நிலைக்கு சென்றது.

34ல் என்ன நடந்தது

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. 34.1வது ஓவரில் அடில் ரஷீத் களமிறங்கி பவுலிங் போட்டார். அந்த ஓவரில் அவர் எப்படியாவது விக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அவர் நினைத்தது போலவே தென்னாபிரிக்கா வீரர் ஆண்டில் பெலுக் வாயோ சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து ஸ்விங் ஆனதில் அவரால் சிக்ஸ் அடிக்க முடியவில்லை.

என்ன ஆனது

அப்போதுதான் திடீர் என்று உள்ளே எகிறி குதித்து வந்த ஸ்டோக்ஸ், பவுண்டரில் லைனுக்கு அருகே பந்தை ஒற்றைக் கையில் பிடித்தார். ஒற்றைக் கையில் பிடித்தது மட்டுமில்லாமல், டைவ் அடித்து, உருண்டு விழுந்தார். இது மிக மிக கடினமான கேட்ச் என்பது வீடியோவை பார்த்தாலே தெரியும்.

செம

செம

தற்போது இந்த கேட்ச் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இனி எத்தனை கேட்சுகள் பிடிக்கப்பட்டாலும், இது போல ஒரு கேட்சை கண்டிப்பாக பார்க்க முடியாது என்று கூறுகிறார்கள். பென் ஸ்டோக்ஸ் எப்படி இதை செய்தார், எப்படி அவர் கையில் பந்து சிக்கியது என்று பலரும் இப்போதும் கூட ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்.

Story first published: Friday, May 31, 2019, 10:46 [IST]
Other articles published on May 31, 2019
English summary
ICC World Cup 2019: Ben Stokes made people go shocked by his wonderful catch in yesterday match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X