For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுதான் நடக்க போகிறது.. அரசியலுக்கு கண்டிப்பாக வரும் தோனி.. கிளவுஸ் சர்ச்சைக்கு பின் நடந்தது என்ன?

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின் இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.

Recommended Video

Dhoni Glove Issue: அரசியலுக்கு வரும் தோனி.. கிளவுஸ் சர்ச்சைக்கு பின் நடந்தது என்ன?- வீடியோ

லண்டன்: கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின் இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். இதுகுறித்து திடுக்கிடும் தகவல்கள் சிலவும் வெளியாகி உள்ளது.

தோனி முதல்முறை கிரிக்கெட் உலகில் பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் அணிந்திருந்த கிளவுஸ் சர்ச்சையானது மட்டுமில்லாமல் தற்போது உலகம் முழுக்க இந்த பிரச்சனை வைரலாகி உள்ளது.

இதில் பெரிய அளவில் அரசியலும் புகுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தோனிக்கு அரசியல் ஆசை இருக்கிறது என்றும் பலர் எழுதி வருகிறார்கள்.

தவான் போக கூடாது.. சண்டை போட்ட கோலி.. சமாதானம் செய்த பிசிசிஐ.. இரவோடு இரவாக நடந்த டிவிஸ்ட்! தவான் போக கூடாது.. சண்டை போட்ட கோலி.. சமாதானம் செய்த பிசிசிஐ.. இரவோடு இரவாக நடந்த டிவிஸ்ட்!

 எப்படி பிரச்சனையானது

எப்படி பிரச்சனையானது

தோனி அணிந்திருந்த கிளவுஸ் ஒன்றுதான் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம். தோனி தற்போது இந்திய ராணுவத்தின் பாராசூட் படையில் லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். இதற்காக அவருக்கு ஒரு பேட்ச் வழங்கப்பட்டது. 2011 அவர் இந்த பொறுப்பில் சேர்ந்தார். அவர் செய்த பயிற்சியின் காரணமாக அவருக்கு பாலிடான் பேட்ச் வழங்கப்பட்டது.

பாலிடான் எப்படி

பாலிடான் எப்படி

கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கீப்பர் தோனி இந்த பேட்சை அணிந்து விளையாடினார். இது பாராசூட் படையில் வழங்கப்படும் முக்கியமான பேட்ச் ஆகும். இதை அவர் தனது கிளவுஸில் பிரிண்ட் செய்து, அந்த முத்திரையுடன் விளையாடினார். அவரின் பாலிடான் பேட்ச் முத்திரை இதில் இருந்தது. இது பெரிய சர்ச்சையானது.

போனது

போனது

ஐசிசி விதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட ராணுவம், மதம், பிரிவினை, இதை குறிக்கும் வகையில் ஆடை அணிய கூடாது. இதனால் இதற்கு ஐசிசி எதிர்ப்பு தெரிவித்தது. அவர் அணிந்து இருந்த கிளவுஸ் இணையம் முழுக்க வைரலானது. இதற்கு ஐசிசி தொடர்ந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

போட்டியில் நடக்கவில்லை

போட்டியில் நடக்கவில்லை

இதையடுத்து பிசிசிஐ தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. ஆனால் அதை ஐசிசி ஏற்றுக்கொள்ள மறுத்தது. கடைசியாக நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தோனி அந்த கிளவுஸை அணியவில்லை. இதனால் பெரும் எதிர்பார்ப்பில் வந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் இனி எந்த போட்டியிலும் அந்த கிளவுஸை அணிய மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

தோனி இந்திய ராணுவத்திற்காக இப்படி குரல் கொடுத்ததற்கு பின் அரசியல் காரணம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். தோனி தனது ஓய்விற்கு பின் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் இப்போதே அதற்கு தயாராகும் விதமாக இந்திய ராணுவம் குறித்து பேசி வருகிறார். அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்கிறார்கள்.

அரசியலுக்கு வருவார்

இந்த கிளவுஸ் பிரச்சனையை தோனி நினைத்து இருந்தால் எளிதாக தீர்த்து இருக்க முடியும். ஆனால் அவர் இதை தேவையில்லாமல் வளரவிட்டதற்கு காரணமே அவரின் அரசியல் ஆசைதான் என்கிறார்கள். கம்பீர் போல ஓய்விற்கு பின் தோனியும் ஏதாவது கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

Story first published: Wednesday, June 12, 2019, 10:46 [IST]
Other articles published on Jun 12, 2019
English summary
ICC World Cup 2019: Dhoni Glove controversy may give his political mileage after retirement.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X