For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது அவருக்கான நேரம்.. குடிசை வீட்டு பயிற்சி.. தினேஷ் கார்த்திக்கின் வாழ்வை மாற்றிய 1095 நாட்கள்!

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்

லண்டன்: இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது அவருக்கு 34 வயது ஆகிறது.

ஒரு காலத்தில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் கேப்டன் ஆகும் வாய்ப்பை பெற்றார். ஆனால் கடைசி நொடியில் அவருக்கான வாய்ப்பு நழுவிச் சென்றது. கடைசி நேரத்தில் தோனி இந்திய அணியின் கேப்டன் ஆனார்.

அதன்பின் நடந்தது எல்லாம் தினேஷ் கார்த்திக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்க கூடாத விஷயங்கள். பார்ம் அவுட்டில் இருந்த தினேஷ் கார்த்திக் தேசிய அணியில் இடம் பிடிக்க முடியாது கஷ்டப்பட்டு வந்தார்.

 கடைசியில் இலங்கை போட்டியிலும் அது நடந்து விட்டது.. தலையை பிய்த்துக் கொண்ட நியூசி வீரர்கள்.. வீடியோ! கடைசியில் இலங்கை போட்டியிலும் அது நடந்து விட்டது.. தலையை பிய்த்துக் கொண்ட நியூசி வீரர்கள்.. வீடியோ!

மிக மோசம்

மிக மோசம்

தேசிய அணியில் மட்டுமில்லாமல் ரஞ்சி கோப்பையிலும் விளையாட முடியாமல் கஷ்டப்பட்டார். அவ்வளவுதான் தினேஷ் கார்த்திக் கதை முடிந்தது. அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றுதான் எல்லோரும் கூறினார்கள். ஆனால் நடந்தது வேறு விஷயம். அந்த தோல்விதான் தினேஷ் கார்த்திக்கிற்கு வலிமையை கொடுத்தது.

மூன்று வருடம்

மூன்று வருடம்

மூன்று வருடம் மும்பையில் மிக மிக சிறப்பான பயிற்சியை மேற்கொண்டு. குடிசை வீட்டில் கஷ்டப்பட்டு தினேஷ் கார்த்திக் மீண்டும் பார்மிற்கு வந்தார். அபிஷேக் நாயர் என்ற மும்பையை சேர்ந்த பயிற்சியாளர்தான் இவருக்கு புதிய விளையாட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐபிஎல், ஒருநாள் என எந்த போட்டியிலும் சரியாக வாய்ப்பு இல்லாத காரணத்தால் தினேஷ் தன்னுடைய விளையாட்டு முறையை மாற்றியுள்ளார்.

எப்படி

எப்படி

பயிற்சியாளர் அபிஷேக் நாயர் அவருக்கு சொந்தமாக மும்பையில் இருக்கும் சிறிய குடிசை போன்ற வீட்டில்தான் தினேஷ் கார்த்திக் தங்கி இருந்தார். பயிற்சி நாட்கள் முழுவதும் அதிகாலையிலேயே எழுப்பி பயிற்சி செய்ய பயிற்சி பெற்றுள்ளார். மும்பையில் சிறப்பாக செயல்படும் மூன்று பயிற்சியாளர்களிடம் மாற்றி மாற்றி நாள் முழுக்க தினேஷ் கார்த்திக் பயிற்சி பெற்றுள்ளார்.

எங்கு

எங்கு

பயிற்சி கொடுக்கும் சமயங்களில் எல்லாம் அந்த வீட்டிற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று அபிஷேக் அவரிடம் கூறியுள்ளார். சென்னையில் எவ்வளவு பெரிய வீடு இருந்தாலும் இனி உனக்கு இதுதான் வீடு என்று அங்கேயே அடைத்து வைத்துள்ளார். மதியம் மட்டுமே 3 பயிற்சி சுற்றுகள் இவருக்கு நடக்கும். கோலி கூட இப்படி பயிற்சி மேற்கொண்டது கிடையாது.

யாருமே இல்லை

யாருமே இல்லை

ஏன் உலகில் யாருமே இப்படி பயிற்சி செய்தது இல்லை என்றுள்ளார். இதற்காக 'விஷுவலைசேஷன்' என்னும் புதிய பேட்டிங் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். பந்தை பார்க்காமல், பவுலரின் கை அசைவை வைத்து அது எவ்வளவு வேகத்தில், எந்த திசையில் வரும் என எல்லாவற்றையும் நொடி பொழுதில் கணிக்கும் முறையாகும். இதுதான் இவரை தற்போது உலகக் கோப்பை அணிக்கு எடுக்க வைத்திருக்கிறது.

எத்தனை வருடம்

எத்தனை வருடம்

தினேஷ் கார்த்திக்குக்கு ஒருநாள் இரண்டு நாள் இந்த பயிற்சியை எடுக்கவில்லை. மொத்தம் 3 வருடம் இப்படி பயிற்சி எடுத்துள்ளார். 3 வருடமும் அவர் அதே வீட்டில் இருந்து பயிற்சி எடுத்து இருக்கிறார். இந்திய அணியில் இடம் கிடைக்காமல் விட மாட்டேன் என்று குறிக்கோளுடன் தினேஷ் கார்த்திக்கும் இப்படிப்பட்ட பயிற்சியில் இறங்கி இருந்தார். 2014ல் பயிற்சி தொடங்கி இருக்கிறது.

இடம் கிடைத்தது

இடம் கிடைத்தது

அதன்பின் இலங்கையில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான நிதாஸ் கோப்பை போட்டியில் இவர் ஆடியது, இந்திய அணியில் இவருக்கு நிலையான இடத்தை கொடுத்தது. இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில்தான் இவருக்கு உலகக் கோப்பை அணியில் தற்போது முக்கியமான இடம் கிடைத்து இருக்கிறது. உலக கோப்பை அணியில் இப்படி எந்த மாதிரியான ஜாலங்களை நிகழ்த்துவார் என்று பார்க்கலாம்.

நேற்று பிறந்த நாள்

நேற்று பிறந்த நாள்

நேற்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது இவருக்கு 34 வயது ஆகிறது. இந்திய அணியில் இருக்கும் சீனியர் வீரர்களில் இவர் முக்கியமானவர். தோனிக்கு அடுத்தபடியாக அதிக சீனியாரிட்டி கொண்ட வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 2, 2019, 10:50 [IST]
Other articles published on Jun 2, 2019
English summary
ICC World Cup 2019: Dinesh Karthick may be a game changer in this world cup match for India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X