For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூடான ஹாலஜன் விளக்கு.. இனி இப்படித்தான் போட்டி நடக்கும்.. மழைக்கு எதிராக ஐசிசி இறக்கும் புது வித்தை!

மழையால் பாதிக்கப்படும் மைதானங்களை உலர வைக்க புதிய முறையை பயன்படுத்த ஐசிசி முடிவு செய்து இருக்கிறது.

லண்டன்: மழையால் பாதிக்கப்படும் மைதானங்களை உலர வைக்க புதிய முறையை பயன்படுத்தி ஐசிசி முடிவு செய்து இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியதில் இருந்தே நிறைய சர்ச்சையான சம்பவங்கள் நடந்து வருகிறது. தோனியின் கிளவுஸ் தொடங்கி கிரிக்கெட் மைதானத்தில் மழை பெய்வது வரை நிறைய சர்ச்சையான சம்பவங்கள் நடந்து வருகிறது.

பொதுவாக இங்கிலாந்தில் வருடம் முழுக்க எப்போது மழை பெய்யும் என்றே கணிக்க முடியாது. தற்போது அங்கு பெய்யும் மழை காரணமாக வரிசையாக போட்டிகள் ரத்தாகி வருகிறது.

சாஸ்திரிக்கு குட் பை.. இந்திய அணியை வழிநடத்தும் தோனி.. ஓய்விற்கு பின் தரப்போகும் இன்ப அதிர்ச்சி சாஸ்திரிக்கு குட் பை.. இந்திய அணியை வழிநடத்தும் தோனி.. ஓய்விற்கு பின் தரப்போகும் இன்ப அதிர்ச்சி

மிக மோசம்

மிக மோசம்

ஆனால் ஏற்கனவே மழை காரணமாக இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக நேற்று நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான போட்டிகள் ரத்து செய்யப்பட்டது . இதுவரை மொத்தம் 4 போட்டிகள் இந்த தொடரில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்றும் சிக்கல்

இன்றும் சிக்கல்

அதேபோல் இன்று நடக்க உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியும் ரத்தாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த நிலையில் தற்போது மான்செஸ்டரில் மிக மோசமாக மழை பெய்து வருகிறது. இன்றும் அங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஏன்

ஏன்

பெரும்பாலும் மழை நின்றாலும் கூட, போட்டி அதிகம் தடை படுவது மைதானம் ஈரமாக இருப்பதால்தான். பிட்ச் எப்படியும் மூடப்பட்டு இருப்பதால், அதில் தண்ணீர் செல்ல வாய்ப்பு இல்லை. ஆனால் மைதானத்தில் மற்ற பகுதியில் தண்ணீர் தேங்கி பீல்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடுவதால்தான் போட்டி பெரும்பாலும் தடை படுகிறது.

தீர்வு என்ன

தீர்வு என்ன

இதற்குத்தான் தற்போது ஐசிசி தீர்வு ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி சூடான ஹாலஜன் விளக்குக்களை பயன்படுத்த ஐசிசி முடிவு செய்துள்ளார். இதை ஈரமாக இருக்கும் இடங்களில் பயன்படுத்தினாலும், சூடு காரணமாக உடனடியாக தண்ணீர் வேகமாக ஆவி ஆகிவிடும். இதனால் மைதானம் உடனடியாக உலரும்.

சூப்பர் வெற்றி

இதை ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள ஓல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் வைத்து சோதனை செய்து பார்த்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது வெற்றிபெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு வெறும் 20 நிமிடம்தான் ஆனது என்கிறார்கள். இதனால் இதை மற்ற மைதானங்களிலும் பயன்படுத்த இருப்பதாக கூறுகிறார்கள்.

Story first published: Sunday, June 16, 2019, 11:36 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
ICC World Cup 2019: Halogen lamps may be used to dry the wet filed ground says ICC.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X