For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீரர்களின் தலைவிதியை மாற்றிய 59 மீட்டர்.. இந்திய அணியின் தேர்வுக்கு பின் நடந்த சுவாரசிய சம்பவம்!

இந்திய அணியில் இன்று நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டதற்கு பின் மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது.

Recommended Video

WORLD CUP: IND VS BAN | இந்திய அணியில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்திய 59 மீட்டர்- வீடியோ

லண்டன்: இந்திய அணியில் இன்று நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டதற்கு பின் மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இந்தியா வங்கதேசம் போட்டி நடந்து வரும் எட்க்பாஸ்டன் மைதானமும் அதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த லீக் ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக செல்கிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. முதலில் இறங்கிய ரோஹித் மற்றும் ராகுல் ஜோடி தற்போது தீவிரமாக ஆடி வருகிறார்கள்.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இந்திய அணியில் தற்போது நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. கேதார் ஜாதவ் நீக்கப்பட்டு தற்போது அணிக்குள் தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அணிக்குள் புவனேஷ்வர் குமார் எடுக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் அதிக பலம் பெற்றுள்ளது.

வெளிப்படை

வெளிப்படை

இந்திய அணி வெளிப்படையாக தற்போது முக்கிய மாற்றம் ஒன்றை செய்து இருக்கிறார்கள். ஒரே ஒரு ஸ்பின் பவுலருடன் இந்தியா களமிறங்கி உள்ளது. குல்தீப் யாதவ் அணியில் இல்லை. அதேபோல் பார்ட் டைம் ஸ்பின் பவுலர்களும் யாரும் அணியில் இல்லை. இதனால் இன்று சாஹல் மட்டுமே இந்திய அணியில் ஸ்பின் பவுலிங்கை சமாளிக்க வேண்டும்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. கடந்த இந்தியா vs இங்கிலாந்து போட்டி இதே எட்க்பாஸ்டன் மைதானத்தில்தான் நடந்தது. எட்க்பாஸ்டன் மைதானம் என்பது மிக மிக சிறிய மைதானம். இங்கு ஸ்பின் பவுலிங்கில் மிக எளிதாக விளையாட முடியும். பந்து இங்கு பெரிதாக ஸ்விங் ஆகாது. அதேபோல் கிரிசை விட்டு கொஞ்சம் நகர்ந்து நின்று ஆடினால் எளிதாக ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியும்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதைத்தான் இங்கிலாந்து போட்டிக்கு கோலி குற்றஞ்சாட்டி இருந்தார். எட்க்பாஸ்டன் மைதானம் சிறிதாக இருக்கிறது. ஸ்பின் பவுலிங் இங்கு எடுபடவில்லை. பிட்ச் பிளாட்டாக இருக்கிறது. பின்பக்கம் 59 மீட்டர்தான் பவுண்டரி லைன் உள்ளது. லேசாக ஸ்வீப் ஷாட் அடித்தால் சிக்ஸ் போய்விடுகிறது, என்று குற்றஞ்சாட்டி இருந்தார். தற்போது அதே 59 மீட்டர்தான் இந்திய அணியில் மாற்றங்களை செய்துள்ளது.

அது

அது

அதே மைதானத்தில் தற்போது போட்டி நடப்பதால் குல்தீப் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மைதானத்தின் அளவை கோலி முக்கிய காரணமாக இதில் கருத்தில் கொண்டு இருக்கிறார். இதனால் ஸ்பீட் பவுலர்களுக்கு மட்டும் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பேட்ஸ்மேன்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. மைதானத்தின் அளவை வைத்து அணியை கோலி மொத்தமாக மாற்றியுள்ளார்.

Story first published: Tuesday, July 2, 2019, 16:34 [IST]
Other articles published on Jul 2, 2019
English summary
ICC World Cup 2019: How 53-meter groud played a major role in choosing the playing eleven for India against Bangladesh?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X