For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கு வயசாகிடுச்சு.. சச்சின் மட்டும் எப்படி ஆடுனார்.. மாறி மாறி அடித்துக்கொண்ட ரசிகர்கள்.. பரபர!

தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுக்கு இடையில் சமூக வலைத்தளங்களில் கடும் சண்டை நடந்து வருகிறது.

Recommended Video

தோனி மீது விமர்சனம்... மாறி மாறி அடித்துக்கொண்ட ரசிகர்கள்

லண்டன்: தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுக்கு இடையில் சமூக வலைத்தளங்களில் கடும் சண்டை நடந்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் தோனி மிகவும் மோசமாக ஆடினார். தோனி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடி வந்தார்.தோனி 52 பந்தில் 28 ரன்கள் அடித்து இருந்த போது அவுட்டானார்.

இதை சச்சின் கடுமையான விமர்சனம் செய்து இருந்தார். தோனி கொஞ்சம் கூட பொறுப்போடு ஆடவில்லை என்று வெளிப்படையாக சச்சின் விமர்சனம் செய்தார்.

என்ன விமர்சனம்

என்ன விமர்சனம்

சச்சின் தனது பேச்சில், தோனி ஒரு மூத்த வீரர். அதற்கு ஏற்றபடி அவர் ஆட வேண்டும். கொஞ்சம் பாசிட்டிவாக அவர் ஆட வேண்டும். ஆப்கானிஸ்தான் பவுலிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக அவ்வளவு மெதுவாக ஆட கூடாது. தோனி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாசிட்டிவாக ஆடவில்லை. தோனி நன்றாக அடித்து ஆட கூடியவர். ஆனால் அவரின் ஸ்டிரைக் சென்ற முறை சரியாக இல்லை, என்று குறிப்பிட்டார்.

என்ன சண்டை

என்ன சண்டை

இந்த நிலையில் நேற்றே சச்சின் மற்றும் தோனி ரசிகர்களுக்கு இடையில் இதனால் சண்டை நடந்தது. யார் பெரிய வீரர் என்பது தொடர்பாக மாற்றி மாற்றி சண்டை போட்டுகொண்டார்கள். இன்று காலையில் இருந்து இந்த சண்டை தீவிரம் அடைந்து இருக்கிறது. இரு தரப்பு ரசிகர்களும் மாறி மாறி புள்ளி விவரங்களை வெளியிட்டு சண்டையிட்டு வருகிறார்கள்.

சச்சின் என்ன

இவர் ''தன்னால எப்ப வெளையாட முடியாதுன்னு தோணுதோ அப்ப தலைவனே கெளம்பிடுவான். ஏன்னா டீம் தான் முக்கியம். உங்காளுக மாதிரி சீட்டத்தேச்சுக்கிட்டு கழுத்தப் புடிச்சு வெளிய தள்ற வரைக்கும் எவனாவது இருப்பானா.'' என்று தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

தோனி மோசம்

இவர் வங்கதேசத்திற்கு எதிராக நடந்த போட்டியை எடுத்துக்காட்டி, தோனி டக் அவுட் ஆனதை சுட்டி காட்டி இருக்கிறார்.

கங்குலி எப்படி

அதே சமயம் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக கங்குலி உள்ளிட்ட வீரர்கள் மோசமாக திணறியதை இவர் எடுத்துக் காட்டி இருக்கிறார்.

யார் சிறந்தவர்

அதேபோல் இவர், அப்புடியே கேப்டன்சி காலங்கள்ல சச்சினோட இன்டிவிஜுவல் பெரபார்மன்சுகளையும் கொண்டாந்து கொட்டுங்களேன் மை டியர் தோனிபோர்ப்படைகளே என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

என்ன சமாதானம்

இவர், தோனியை போல் சிறந்த கேப்டனாக சச்சினாலும் முடியாது.. சச்சினை போல் சிறந்த பேட்ஸ்மேனாக தோனியாலும் முடியாது.. என்று சமாதானமாக பேசியுள்ளார்.

தோனிதான் சிறந்தவர்

இவர், 2007 உலகக் கோப்பையில் சச்சினை விட தோனிக்கே அதிக ஸ்டிரைக் ரேட் இருந்தது என்று இவர் ஆதரங்களுடன் கூறி, தோனியே சிறந்தவர் கூறியுள்ளார். இப்படி தோனி ரசிகர்களும் சச்சின் ரசிகர்களும் மாறி மாறி டிவிட்டரில் பெரிய அளவில் சண்டை போட்டு வருகிறார்கள்.

Story first published: Tuesday, June 25, 2019, 14:02 [IST]
Other articles published on Jun 25, 2019
English summary
ICC World Cup 2019: Huge Fight between Sachin fans and Dhoni fans in Social Media.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X