For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி அதிரடி முடிவு.. தூக்கி அடிக்கப்பட்ட விஜய் சங்கர்.. அணிக்குள் இளம் நாயகனின் சர்ப்ரைஸ் என்ட்ரி!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே விஜய் சங்கர் நீக்கப்பட்டு இருக்கிறார்.

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இருந்து எல்லோரும் எதிர்பார்த்தது போலவே விஜய் சங்கர் நீக்கப்பட்டு இருக்கிறார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இந்த தொடரில் மிக முக்கியமான போட்டியாக இன்றைய போட்டி பார்க்கப்படுகிறது.

இன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இன்று இந்தியா தோல்வி அடைந்தால் பெரும்பாலும் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழக்கவும் நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

யார்

யார்

இந்த நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து இருக்கிறது. போட்டி நடக்கும் பிர்மிங்ஹாம் மைதானம் பவுலிங் பிட்ச் என்பதால் இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து இருக்கிறது.

 விஜய் சங்கர்

விஜய் சங்கர்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே விஜய் சங்கர் நீக்கப்பட்டு இருக்கிறார். கடந்த சில போட்டிகளாக இவர் சரியாக விளையாடவில்லை. இவர் களமிறங்கிய போட்டிகளில் எல்லாம் தொடர்ந்து சொதப்பிக் கொண்டே வந்தார். இதனால் தற்போது இவர் நீக்கப்பட்டுள்ளார்.

பண்ட்

பண்ட்

இந்த நிலையில் அணிக்குள் தற்போது ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். பண்ட் அணிக்குள் வர வேண்டும் என்று பல நாட்களாக ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அணிக்குள் பண்ட் கொண்டு வரப்பட்டு உள்ளார். பண்ட் பெயரை சொன்னதுமே அரங்கமே அதிர்ந்தது.

காயம்

காயம்

இந்த நிலையில் விஜய் சங்கரின் கால் விரலில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதான் அவர் போட்டியில் இன்று களமிறங்காமல் போவதற்கு காரணம் என்றும் கூறுகிறார்கள். அதே சமயம் இவர் களமிறங்கிய 3 போட்டிகளிலும் மோசமாக சொதப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 30, 2019, 15:04 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
ICC World Cup 2019: India gets a pant, Kohli removes Vijay Shankar after a series of the worst performance.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X