For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்போது நாங்கதான் கிங்.. ஆஸி, நியூசியை அடித்து துவைத்து இந்தியா செய்த சாதனை.. செம!

இந்திய அணி இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கியமான சாதனை ஒன்றை செய்து இருக்கிறது.

Recommended Video

World Cup 2019 : ஆஸி, நியூசியை அடித்து துவைத்து இந்தியா செய்த சாதனை.. செம!- வீடியோ

லண்டன்: இந்திய அணி இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கியமான சாதனை ஒன்றை செய்து இருக்கிறது. இந்திய அணி தொடர்ச்சியாக நன்றாக ஆடும்பட்சத்தில் அந்த சாதனையை கண்டிப்பாக தக்க வைத்துக் கொள்ள முடியும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. நாளுக்கு நாள் போட்டியில் விறுவிறுப்பு கூடிக்கொண்டே செல்கிறது.

முக்கியமாக செமி பைனலுக்கு நுழைய போகும் நான்காவது அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த அணி பெரிய அணிகளை வீழ்த்திவிட்டு செமி பைனலுக்குள் வரும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

எப்படி இருந்தது

எப்படி இருந்தது

இந்த உலகக் கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா அணி தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. 7 போட்டிகளில் விளையாடி, 1 போட்டியில் தோல்வி அடைந்து 12 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 7 போட்டிகளில் ஒன்றில் தோல்வி அடைந்து, ஒன்று மழையால் ரத்தாகி 11 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து எப்படி

இங்கிலாந்து எப்படி

அதே சமயம் இங்கிலாந்து அணி 7 போட்டிகளில் 3ல் தோல்வி அடைந்து 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் அந்த அணி 4வது இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இடங்களை வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை பெற்று உள்ளது.

கடைசி எப்படி

கடைசி எப்படி

மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா அணிகள் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் அந்த அணிகள் செமி பைனல் வாய்ப்பை இழந்துள்ளது. ஆப்கானிஸ்தான் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பெற்றுள்ளது. இதில்தான் இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

என்ன சாதனை

என்ன சாதனை

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. 5 போட்டிகளில் இந்தியா ஒன்றில் கூட தோற்கவில்லை. முக்கியமாக ஆஸ்திரேலியா , பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளை இந்தியா வீழ்த்தி இருக்கிறது.

என்ன இடம்

என்ன இடம்

இந்தியா தற்போது 3ம் இடத்தில் உள்ளது. விரைவில் இந்தியா முதல் இடத்தை அடைய வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாதான் இந்த தொடரில் கிங் என்பதை இப்போதே நிரூபித்து உள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக நன்றாக ஆடும்பட்சத்தில் அந்த சாதனையை கண்டிப்பாக தக்க வைத்துக் கொள்ள முடியும்.

Story first published: Thursday, June 27, 2019, 8:44 [IST]
Other articles published on Jun 27, 2019
English summary
ICC World Cup 2019: India is the only team yet to face a loss in this series so far.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X