For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விக்கெட் போக கூடாது.. அதிரடியாகவும் ஆட வேண்டும்.. இந்திய அணிக்கு இன்று வைக்கப்பட்ட செக்.. ஏன்?

நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி இன்று தொடக்கத்தில் இருந்து அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

Recommended Video

World Cup 2019 :அதிரடியாகவும் விளையாடனும், விக்கெட்டும் இருக்கனும்..இந்தியாவுக்கு இப்படி ஒரு சிக்கல்

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி இன்று தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விக்கெட் இழக்காமல் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று செமி பைனல் போட்டி நடக்க உள்ளது. நேற்று நடந்த போட்டியின் தொடர்ச்சியாக இன்று மீதம் இருக்கும் ஓவர்கள் வீசப்பட உள்ளது.

நேற்று நியூசிலாந்து 46.1 ஓவர்கள் பிடித்து 5 விக்கெட்டை இழந்து வெறும் 211 ரன்கள் எடுத்தது. அதன்பின் போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

நல்ல வானிலை

நல்ல வானிலை

இந்த நிலையில் போட்டி நடக்க வேண்டிய மான்செஸ்டர் ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் தற்போது நல்ல வானிலை நிலவி வருகிறது. ஆனால் மாலை இந்திய அணி பேட்டிங் செய்யும் போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இந்திய அணியின் பேட்டிங் முடியும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்திய நேரப்படி அங்கு 6-6.30 மணியில் மழை பெய்ய தொடங்கலாம்.

பேட்டிங் செய்கிறது

பேட்டிங் செய்கிறது

இப்படி இந்திய அணி பேட்டிங் செய்யும் போது மழை வந்து போட்டி தடைபட்டால், போட்டி முடிவை டிஎல்எஸ் முறைப்படி அறிவிக்க வாய்ப்புள்ளது. போட்டி பாதியில் நின்றால் டிஎல்எஸ் முறைப்படி, இந்திய அணி இத்தனை ஓவர்களில் இத்தனை விக்கெட் இழப்பிற்கு எவ்வளவு ரன்கள் எடுத்து இருக்கிறது என்று பார்ப்பார்கள். அதை வைத்து போட்டியின் முடிவை அறிவிப்பார்கள்.

டிஎல்எஸ் எப்படி

டிஎல்எஸ் எப்படி

பொதுவாக டிஎல்எஸ் இலக்குகளை கணிக்கும் போது, பேட்டிங் செய்யும் அணி இழந்திருக்கும் விக்கெட்டும் கணக்கில் கொள்ளப்படும். சேசிங் செய்யும் அணி அதிக ரன்களை எடுத்து இருந்தாலும், அதிக விக்கெட்டுகளை இழந்து இருந்தால் தோல்வி அடையவே அதிக வாய்ப்பு இருக்கும். அதேபோல் விக்கெட்டே இழக்காமல் குறைந்த ரன் ரேட்டில் விளையாடி வந்தாலும் சேசிங் செய்யும் அணி டிஎல்எஸ் முறைப்படி தோல்வி அடையவே வாய்ப்பு அதிகம்.

அதிரடி வேண்டும்

அதிரடி வேண்டும்

இதனால் இந்திய அணி இன்று தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி அதிக ரன் ரேட்டில் போட்டியை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அதோடு பெரிய அளவில் விக்கெட்டுகளை இழக்காமல் இருக்க வேண்டும். இதுதான் இதில் மிக முக்கியம். இந்தியா நிறைய விக்கெட்டுகளை இழந்து இருந்தால் கடைசியில் டிஎல்எஸ் இலக்கு நிர்ணயம் செய்யும் போது நியூசிலாந்து வெற்றிபெற வாய்ப்பு அதிகம் ஆகும்.

வீரர்கள் முக்கியம்

வீரர்கள் முக்கியம்

இதனால் இந்திய வீரர்கள் இன்று மிகவும் கவனமாக ஆட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதேபோல் இந்தியா மீதம் இருக்கும் 4 ஓவர்களில் நியூசிலாந்து அணிக்கு பெரிய அளவில் ரன் கொடுக்காமல் முடிந்தவரை விக்கெட் வீழ்த்த முயற்சி செய்ய வேண்டும்.

Story first published: Wednesday, July 10, 2019, 14:25 [IST]
Other articles published on Jul 10, 2019
English summary
ICC World Cup 2019: Why Indian Batsmen play carefully to avoid DLS disaster against New Zealand today?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X