For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு வீரர் கூட இல்லை.. மோசமான நிலையில் இந்தியாவின் டாப் வீரர்கள்.. இனியாவது சுதாரிப்பார்களா?

இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரை என்னதான் வெற்றிகரமாக விளையாடி வந்தாலும் முக்கியமான விஷயம் ஒன்றை இந்திய அணி தவறவிட்டு உள்ளது.

லண்டன்: இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரை என்னதான் வெற்றிகரமாக விளையாடி வந்தாலும் முக்கியமான விஷயம் ஒன்றை இந்திய அணி தவறவிட்டு உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எல்லா அணிகளும் செமி பைனலுக்கு நுழைவதற்காக தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. ஆஸ்திரேலியா அணி முதல் ஆளாக செமி பைனலுக்கு சென்றுவிட்டது. இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் செமி பைனலுக்கு நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஆனால் நான்காவது ஆளாக செமி பைனலுக்கு நுழைய போகும் அணி எது என்பது கேள்வியாக இருக்கிறது. இங்கிலாந்து அணி செமி பைனலுக்கு செல்லுமா என்பது சந்தேகம்தான்.

இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம்

இந்த புள்ளி பட்டியல் தீவிரமாக கவனிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் வேறு இரண்டு பட்டியல்களும் அதிக வைரலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் ஒரு பட்டியல் அதிக விக்கெட் எடுத்த பவுலர்கள் பற்றியது. இன்னொரு பட்டியல் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன்கள் பற்றியது. இது இரண்டிலும் ஒவ்வொரு போட்டியிலும் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள்

அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் தற்போது வார்னர் முதலிடத்தில் இருக்கிறார். வார்னர் மொத்தம் 500 ரன்களை குவித்துள்ளார். அதற்கு அடுத்து ஆரோன் பின்ச் இருக்கிறார். இவர் 496 ரன்களை குவித்துள்ளார். அதற்கு அடுத்து வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் உள்ளார். இவர் 476 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் உள்ளார். இவர் 422 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு அடுத்து கேன் வில்லியம்சன் இருக்கிறார். இவர் 373 ரன்கள் எடுத்துள்ளார்.

விக்கெட்

விக்கெட்

அதேபோல் பவுலிங் என்று பார்த்தால், ஸ்டார்க் 19 விக்கெட் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். ஆர்ச்சர் 16 விக்கெட் எடுத்து 2ம் இடத்தில் உள்ளார். முகமது அமீர் 15 விக்கெட் எடுத்து மூன்றாம் இடத்தில் இருக்கிறார். லோகி 14 விக்கெட் எடுத்து 4ம் இடத்தில் இருக்கிறார். மார்க் வுட் 13 விக்கெட் எடுத்து 5ம் இடத்தில் உள்ளார்

இல்லை

இல்லை

ஆனால் இதில் எதிலும் இந்திய வீரர்கள் டாப் ஐந்து இடங்களை பிடிக்கவில்லை. ஐசிசி நம்பர் ஒன் பேட்ஸ்மேன் கோலி , நம்பர் 2 பேட்ஸ்மேன் ரோஹித் இருந்தும் கூட இந்த பட்டியலில் இடம் பிடிக்க முடியவில்லை. அதேபோல் நம்பர் 1 பவுலர் பும்ராவும் இந்த பவுலர்கள் பட்டியலில் இன்னும் இடம்பிடிக்கவில்லை . இது இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

முக்கியம்

முக்கியம்

இந்திய வீரர்கள் தொடர்ந்து அதிரடியாக, தொடர்ந்து நிலையாக ஆடினால் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் ஆட்டங்களில் கோலி ஒரு செஞ்சுரியாவது அடிக்க முயல வேண்டும். அதேபோல் பும்ரா கடைசி நேரத்தில் மட்டுமில்லாமல் தொடக்கத்திலேயே நிறைய விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 26, 2019, 13:49 [IST]
Other articles published on Jun 26, 2019
English summary
ICC World Cup 2019: Indian team's top players haven't shown their shown best so far in the series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X