For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்போதே வேண்டாம் என்று கூறினேன்.. ஐபிஎல்தான் அனைத்திற்கும் காரணம்.. உலகக் கோப்பையில் புதிய பரபரப்பு!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் சரியாக விளையாடாமல் போனதற்கு ஐபிஎல் போட்டிகள் முக்கிய காரணமாக மாறியுள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் புகார் வைத்துள்ளனர்.

Recommended Video

WORLD CUP 2019 | ஸ்டெய்ன் கருத்தால் உலகக் கோப்பையில் புதிய பரபரப்பு!- வீடியோ

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் சரியாக விளையாடாமல் போனதற்கு ஐபிஎல் போட்டிகள் முக்கிய காரணமாக மாறியுள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் புகார் வைத்துள்ளனர். முக்கியமாக தென்னாப்பிரிக்கா வீரர்கள் இது தொடர்பாக புகார்களை அடுக்கி வருகிறார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் 30தேதி சிறிய விழாவுடன் தொடங்கியது. ஆனால் அதற்கு 15 நாட்களுக்கு முன்புதான் ஐபிஎல் போட்டிகள் முடிவிற்கு வந்தது. சரியாக மே 12ம் தேதிதான் ஐபிஎல் போட்டிகள் முடிவிற்கு வந்தது.

இந்த ஐபிஎல் போட்டிகளால் இந்திய வீரர்கள் சரியாக ஓய்வு கிடைக்காமல் கஷ்டப்பட்டார்கள். ஆனால் தற்போது சுதாரித்துக் கொண்டு வீரர்கள் நன்றாக விளையாடி வருகிறார்கள்.

அடுத்தடுத்து 2 பந்துகளில் அல்வா டைப் கேட்சுகள்.. அசால்ட்டாக கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள் அடுத்தடுத்து 2 பந்துகளில் அல்வா டைப் கேட்சுகள்.. அசால்ட்டாக கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்திய வீரர்கள் இல்லாமல் மற்ற அணியை சேர்ந்த சில வீரர்களும் ஐபிஎல் போட்டிகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிலர் இதனால் பலன் அடைந்தனர் என்றும் கூறலாம். உதாரணமாக பார்ம் இல்லாமல் இருந்த கெயில் ஐபிஎல் தொடரில்தான் பார்மிற்கு வந்தார். பார்மில் இருந்த ரஸல் ஐபிஎல் போட்டிக்கு பின்புதான் பார்மை இழந்தார்.

யார் பாதிப்பு

யார் பாதிப்பு

ஆனால் ஐபிஎல் போட்டிகளால் அதிகம் பாதித்தது தென்னாப்பிரிக்கா அணிதான் என்கிறார்கள். ஆம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முக்கிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளால் பார்ம் அவுட் ஆகியுள்ளார். சிலர் காயம் அடைந்து இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் ரபாடா டெல்லி அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடினார். அவருக்கு அப்போது முதுகில் காயம் ஏற்பட்டது. அந்த பிரச்சனை அவருக்கு இன்னும் சரியாகவில்லை.

ஸ்டெய்ன் எப்படி

ஸ்டெய்ன் எப்படி

இது அவரின் உலகக் கோப்பை போட்டியிலும் வெளிப்பட்டது. அதேபோல் தென்னாப்பிரிக்காவின் இன்னொரு வீரர் ஸ்டெய்ன் பெங்களூர் அணியில் ஒரே ஒரு போட்டியில் விளையாடி , பின் காயம் காரணமாக வெளியேறினார். இவர் இதனால் உலகக் கோப்பை அணியில் இடம்பெற முடியவில்லை. இதுவும் தென்னாப்பிரிக்கா அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. இது போக ஐபிஎல் போன்ற பணம் கொழிக்கும் தொடர்களில் விளையாடத்தான், கடந்த வருடம் ஏபிடி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேரடி குற்றச்சாட்டு

நேரடி குற்றச்சாட்டு

இதை தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஸ்டெய்ன் நேரடியாக குற்றச்சாட்டாக வைத்து இருக்கிறார். ஐபிஎல் போட்டிக்கு செல்ல வேண்டாம் என்று ரபாடவிடம், இப்போது எங்கள் தோல்விக்கு அது பெரிய காரணமாகிவிட்டது கூறினேன், என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால் ஐபிஎல் போட்டியில்தான் வார்னர், ஸ்மித், கெயில் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பார்மிற்கு வந்து சிறப்பாக ஆடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 24, 2019, 11:43 [IST]
Other articles published on Jun 24, 2019
English summary
ICC World Cup 2019: Is IPL a reason behind some players worst show in this world cup series?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X