For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வருத்தமாக இருக்கிறது.. ஆனாலும்.. உருகிய கேன் வில்லியம்சன்.. மெய் மறந்து கைதட்டிய செய்தியாளர்கள்!

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் நேற்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் செய்தியாளர் சந்திப்பில் பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

Eoin morgan : நாங்க ஜெயிச்சது இப்படித் தான் உலக கோப்பை சாம்பியன் குறித்து இங்கிலாந்து கேப்டன்-வீடியோ

லண்டன்: உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் நேற்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் செய்தியாளர் சந்திப்பில் பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

முதல்முறையாக இங்கிலாந்து உலகக் கோப்பை சாம்பியன் ஆகியுள்ளது. புதிய 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியனாக இங்கிலாந்து மகுடம் சூடி இருக்கிறது.

நியூசிலாந்து கடைசிவரை போராடி இந்த போட்டியில் வெற்றிகரமான தோல்வியை சந்தித்து உள்ளது.
சூப்பர் ஓவர் டை ஆன நிலையில் பவுண்டரி கணக்குகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.

நீ அகதி.. உனக்காக விதியை மாற்றுவதா? ஜோப்ராவின் சூப்பர் ஓவருக்கு பின்னிருக்கும் பட்டினி கதை! நீ அகதி.. உனக்காக விதியை மாற்றுவதா? ஜோப்ராவின் சூப்பர் ஓவருக்கு பின்னிருக்கும் பட்டினி கதை!

என்ன கேன் வில்லியம்சன்

என்ன கேன் வில்லியம்சன்

இந்த நிலையில் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியில், இங்கிலாந்து வெற்றிபெற்றதற்காக ஐசிசி விதிகளை நாங்கள் குறை சொல்ல முடியாது. அந்த விதிகள் எல்லாம் முன்பே உருவாக்கப்பட்டுவிட்டது. அந்த விதிகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இதில் திடீர் என்று எல்லாம் மாற்றம் கொண்டு வர முடியாது.

வில்லியம்சன் என்ன சொன்னார்

வில்லியம்சன் என்ன சொன்னார்

இங்கிலாந்து அணி எப்படி வெற்றிபெற்றது ? பவுண்டரி மூலம் அவர்கள் வெற்றிபெற்றார்களா? எனக்கு அதெல்லாம் தெரியாது. என்ன நடந்து என்ன.. உணர்வுகள் கொஞ்சம் இப்போது அழுத்தமாக இருக்கிறது. இதை ஜீரணித்து கொள்ள கொஞ்சம் எங்களுக்கு கடினம்தான். இதை தாண்டி செல்வது கொஞ்சம் இயலாத காரியம்.

வில்லியம்சன் பேட்டி

வில்லியம்சன் பேட்டி

எங்களுக்கு வருத்தம் இருப்பது உண்மைதான். பசங்க எல்லோரும் கொஞ்ச கஷ்டத்தில் இருக்கிறார்கள். நாங்கள் இந்த நாளுக்காக கடினமாக உழைத்தோம். இந்த வெற்றிக்கு இங்கிலாந்து முழு தகுதி பெற்றுள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது.

ஓவர் த்ரோ எப்படி

ஓவர் த்ரோ எப்படி

போட்டியில் நேற்று சில விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. ஒரு ஓவர் த்ரோ போட்டியை மாற்றிவிட்டது. ஆனால் அதற்கு எல்லாம் நாம் எதுவும் செய்ய முடியாது. இனிமேல் அதுபோல் நடக்காமல் இருக்க வேண்டும். அதற்கு நாம் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் குறை சொல்ல முடியாது.

வாய்ப்பு

வாய்ப்பு

நாம் எப்படி இருக்கிறோம் என்பது நம்முடைய உரிமை. நாம் ஜென்டில்மேனாக இருக்க விரும்பினால் அப்படியே இருக்கலாம். வேண்டாம் என்றால் ஜென்டில்மேனாக இல்லாமல் இருக்கலாம். இதுதான் நமக்கு வாழ்க்கை வழங்கி இருக்கும் வாய்ப்பு. நமக்கு எப்படி இருக்க விருப்பமோ.. எப்படி வாழ விருப்பமோ அப்படி வாழ்ந்துவிட்டு செல்ல வேண்டும், என்று உருக்கமாக குறிப்பிட்டார்.

செய்தியாளர்கள் என்ன

செய்தியாளர்கள் என்ன

அவரின் இந்த பேச்சுக்கு பின் செய்தியாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ஒரு கிரிக்கெட் கேப்டனை பார்த்து செய்தியாளர்கள் எழுந்து நின்று கைதட்டியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 15, 2019, 13:26 [IST]
Other articles published on Jul 15, 2019
English summary
ICC World Cup 2019: Kane Williamson press meet after the Tournament becomes viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X