ஒரே வருடத்தில் இது 2வது முறை.. கோலிக்கு மீண்டும் பிளாக் மார்க்.. நடவடிக்கை எடுக்க ஐசிசி திட்டமா?

WORLD CUP 2019: IND VS AFG | கோலிக்கு மீண்டும் எச்சரிக்கை,நடவடிக்கை எடுக்க ஐசிசி திட்டமா?- வீடியோ

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு டீ மெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் தொடர்பான ஐசிசி மெரிட் புத்தகத்தில் இது பதிவு செய்யப்பட உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஐசிசி சில புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. அந்த விதிகளில் வீரர்கள் நடுவர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. விதிகளை மீறும் வீரர்களுக்கு என்ன தண்டனை என்றும் நிறைய புதிய முறைகள் அதில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த விதிமுறையின்படி தற்போது இந்திய அணியின் கேப்டன் கோலி தண்டிக்கப்பட்டு இருக்கிறார்.

சதி.. அவர் வேண்டுமென்றே அப்படி செய்தார்.. இந்திய அணிக்கு எதிராக செயல்பட்ட நடுவர்? திடுக் புகார்!

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இந்தியா ஆப்கானிஸ்தான் இடையில் கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில்தான் இந்த பிரச்சனை நடந்தது. அந்த போட்டியில் 29 வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அதற்கு நடுவர் அலீம் டெர் விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் கோலி நடுவரிடம் சண்டை போட்டார். நீண்ட நேரம் இந்த சண்டை நடந்தது.

அதற்கு முன்பும்

அதற்கு முன்பும்

அதேபோல் போட்டியின் தொடக்கத்திலும் டிஆர்எஸ் எடுக்கும் போதும் கோலி இதேபோல் நடுவரிடம் சண்டை போட்டார். பொறுமை இழந்த கோலி ஒரு நொடி கையெடுத்தும் கூட கும்பிட்டார். இந்த புகைப்படங்கள் எல்லாம் இணையம் முழுக்க வைரலானது. இதுதான் கோலிக்கு தற்போது பிரச்சனையாக முடிந்து இருக்கிறது. கோலி இப்படி நடுவரிடம் சண்டை போட்டது விதிப்படி தவறு.

என்ன தவறு

என்ன தவறு

நடுவரிடம் சண்டை போட்டதன் மூலம் ஐசிசி விதி எண் 2.1ஐ கோலி மீறி இருக்கிறார். இதனால் அவருக்கு 25% வருமானம் பிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அவரின் மெரிட் புக்கில், ஒரு டீ மெரிட் புள்ளி (கருப்பு புள்ளிகள்) வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு ஏற்கனவே டீ மெரிட் புள்ளி ஒன்று உள்ளது. இதனால் அவருக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை எடுக்க போகிறது, இரண்டு ஒருநாள் போட்டியில் அவர் விளையாட முடியாது என்று செய்திகள் வெளியானது.

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

இதற்கு தற்போது கிரிக்கெட் வல்லுநர்கள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். அதன்படி கோலிக்கு டீ மெரிட் புள்ளி மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு ஏற்கனவே ஜனவரியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் டீ மெரிட் புள்ளி கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு புள்ளிகளை கருத்தில் கொண்டு அவருக்கு தடை விதிக்க மாட்டார்கள். இரண்டு சஸ்பென்ஷன் புள்ளிகளை பெற்றதால்தான் தடை விதிப்பார்கள்.

எப்படி செய்தார்

எப்படி செய்தார்

ஆனால் கோலி சஸ்பென்ஷன் புள்ளிகளைய் பெறவில்லை. டீ மெரிட் புள்ளிகளை மட்டுமே இரண்டு பெற்று இருக்கிறார். இதற்காக வருமானத்தில் அபராதம் மட்டுமே விதிப்பார்கள். அதனால் கோலி அடுத்த போட்டிகளில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறியுள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC World Cup 2019: Indian Skipper Kohli gets his second demerit point within one year in ODI.
Story first published: Monday, June 24, 2019, 12:38 [IST]
Other articles published on Jun 24, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X