For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் வேண்டும் என்றே அப்படி செய்தார்.. இதில் ஏதோ தவறு இருக்கிறது.. சர்ச்சையாகும் அந்த ஹிட் விக்கெட்!

நேற்று நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தீல் அவுட்டான விதம் பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

லண்டன்: நேற்று நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தீல் அவுட்டான விதம் பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. பலர் இதற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முக்கியமான அணிகளுக்கு இடையில் நடக்கும் போட்டிகள் இந்த தொடரில் அதிக எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று இந்த நிலையில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நேற்று தென்னாபிரிக்கா அணி இந்த போட்டியில் விளையாடியது.

ஏதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு.. மிக மோசமான நிலையில் ஜாம்பவான் அணி.. செமி வாய்ப்பு பறிபோகிறது! ஏதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு.. மிக மோசமான நிலையில் ஜாம்பவான் அணி.. செமி வாய்ப்பு பறிபோகிறது!

என்ன நடந்தது

என்ன நடந்தது

இதில் தென்னாப்பிரிக்கா அணி 49 ஓவரில் 241 ரன்களை 6 விக்கெட் இழந்து எடுத்தது. அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்களை எடுத்து வென்றது. இதில் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி

எப்படி

நியூசிலாந்து சார்பாக முதலில் களமிறங்கிய கோலின் மூன்றோ அவுட்டான காரணத்தால் கேன் வில்லியம்சனும் , மார்ட்டின் குப்திலும் களமிறங்கி அதிரடியாக ஆடி வந்தனர். இதில் தென்னாப்பிரிக்கா வீரர் ஆண்டில் போட்ட 15 ஓவரில் குப்தீல் ஒரு ஹூக் ஷாட் அடித்தார். வாகாக வந்த பந்தை முன்பக்கம் கால் வைத்து உடலை வளைத்து, 360 டிகிரி திரும்பி, சரியாக பேட்டை வைத்து பந்தை சுழற்றினார்.

சிங்கிள் ஓட

சிங்கிள் ஓட

இதை பார்த்ததும் கேன் வில்லியம்சன் சிங்கிள் ஓட முயற்சி செய்தார். ஆனால் குப்தீல் அங்குதான் ஒரு தவறு செய்து இருந்தார். அவர் பந்தை லாவகமாக ஒரு பக்கம் அடித்து இருந்தாலும், இன்னொரு பக்கம் தனது இடது காலால் ஸ்டம்ப்பை தட்டி விட்டு இருந்தார். இதனால் எப்போதும் கீழே விழாமல் அடம்பிடிக்கும் பெயில்ஸ் கீழே விழுந்தது.

அவுட்டானார்

அவுட்டானார்

இதனால் அம்பயர் அவருக்கு அவுட் கொடுத்தார். அதன்பின் 10 ரன்கள் அடிப்பதற்குள் வரிசையாக நியூசிலாந்து அணி மேலும் 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இதுதான் முதல் ஹிட் விக்கெட் ஆகும். அதேபோல் நியூசிலாந்து தொடக்க வீரர் ஒருவர் உலகக் கோப்பையில் ஹிட் விக்கெட் ஆவதும் இதுவே முதல்முறை.

எப்படி சர்ச்சை

அதேபோல் இது வேண்டும் என்றே செய்யப்பட்டது போல இருக்கிறது என்று சில ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். அவர் வேண்டும் என்றே இப்படி அவுட்டாகி இருக்கிறார். இதில் எதோ மர்மம் இருக்கிறது என்று சிலர் டிவிட் மற்றும் போஸ்ட் செய்து வருகிறார்கள்.

Story first published: Thursday, June 20, 2019, 12:20 [IST]
Other articles published on Jun 20, 2019
English summary
ICC World Cup 2019: Martin Guptill hit wicket makes controversy in the social media.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X