For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூழ்ச்சி மேல் சூழ்ச்சி.. கிரிக்கெட்டை விட்டே போக போகிறேன்.. உடைந்து அழுத முன்னணி வீரர்.. பேட்டி!

தனக்கு எதிராக நிறைய சூழ்ச்சிகள் பின்னப்படுகிறது, இதனால் கிரிக்கெட்டை விட்டே போக போகிறேன் என்று முன்னணி வீரர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

Mohammad shahzad: சூழ்ச்சி மேல் சூழ்ச்சி.. உடைந்து அழுத முன்னணி வீரர்- வீடியோ

லண்டன்: தனக்கு எதிராக நிறைய சூழ்ச்சிகள் பின்னப்படுகிறது, இதனால் கிரிக்கெட்டை விட்டே போக போகிறேன் என்று முன்னணி வீரர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியில் தொடர்ச்சியாக நிறைய சர்ச்சையான விஷயங்கள் நடந்து வருகிறது. அணிக்குள் நடக்கும் அரசியல் தற்போது அப்பட்டமாக வெளியே தெரிய தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

அந்த அணியில் அதிரடியாக ஆட கூடிய வீரர்கள் மிகவும் குறைவு. அந்த அணியில் மூன்று முக்கிய வீரர்கள்தான் தற்போது உலகம் முழுக்க வைரலாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரஷீத் கான், இன்னொருவர் முஜீப் உர் ரகுமான். அதேபோல் ஆப்கானிஸ்தானின் விக்கெட் கீப்பர் முகமது ஷாஷாத் உலகம் முழுக்க பலருக்கும் தெரிந்த வீரர்.

அட.. தலைக்கு தில்ல பார்த்தீங்களா? ஐசிசிக்கு தோனி கொடுத்த ஒரே ஒரு பதிலடி.. செம வைரல்! அட.. தலைக்கு தில்ல பார்த்தீங்களா? ஐசிசிக்கு தோனி கொடுத்த ஒரே ஒரு பதிலடி.. செம வைரல்!

எப்படிப்பட்ட வீரர்

எப்படிப்பட்ட வீரர்

சென்ற வருடம் ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக ஸ்கோர் எடுத்த வீரர் ஷாஷாத் தான். இவரின் ஆட்டம் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளின் வீரர்களுக்கு இணையானதாக இருக்கும். இவரின் குண்டான உடம்பு காரணமாக முதலில் வைரலானவர் பின் பேட்டிங் மூலம் பிரபலம் ஆனார்.

நல்ல கீப்பர்

நல்ல கீப்பர்

அதேபோல் இவர் சிறந்த கீப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இவரின் கீப்பிங்கும் பெரிய அளவில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. நல்ல திறமையான டி 20 பிளேயர் போல ஆடுவதில் இவர் வல்லவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீக்கினார்கள்

நீக்கினார்கள்

இவர் உலகக் கோப்பை தொடரில் நன்றாகவே ஆடி வந்தார். ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷாஷாத் திடீர் என்று நீக்கப்பட்டார். ஷாஷாத் நீக்கத்திற்கு அவரின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கூறப்பட்டது. ஆனால் இவர் தனக்கு காயம் பெரிதாக இல்லை என்று கூறி இருக்கிறார். இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

செம

செம

ஆப்கான் அணி வரிசையாக தோல்வி அடைந்தாலும், ஷாஷாத் நன்றாகவே ஆடி வந்தார். ஆனால் அவரை அணியில் இருந்து அணி நிர்வாகம் நீக்கியது. இதில் பெரிய சூழ்ச்சி உள்ளது என்கிறார்கள். இதுகுறித்து தற்போது ஷாஷாத் பேட்டி அளித்து இருக்கிறார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அதில், நான் நல்ல உடல் தகுதியோடு இருக்கிறேன். எனக்கு காலில் காயமே இப்போது இல்லை. ஆனால் என்னை வேண்டும் என்றே நீக்கி இருக்கிறார்கள். 2015 உலகக் கோப்பை போட்டியிலும் இப்படித்தான் செய்தார்கள். எனக்கு கிரிக்கெட் விளையாடும் ஆசையே இதனால் போய்விட்டது. எனக்கு இனியும் அணியில் இருக்க விருப்பமில்லை.

போய்விடலாம் என்று இருக்கிறேன்

போய்விடலாம் என்று இருக்கிறேன்

நான் இதனால் கிரிக்கெட் விளையாடுவதை விட்டுவிட்டே போய்விடலாம் என்று இருக்கிறேன். இது தொடர்பாக குடும்பத்தினரிடம் ஆலோசனை நடத்த போகிறேன். இனியும் என்னால் சூழ்ச்சிக்கு மத்தியில் கிரிக்கெட் விளையாட முடியாது என்று உருக்கமாக கூறி உள்ளார்.

Story first published: Tuesday, June 11, 2019, 12:38 [IST]
Other articles published on Jun 11, 2019
English summary
ICC World Cup 2019: Mohammad Shahzad speaks about quitting against Afghanistan team management.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X