142 கிமீ வேகத்தில் வந்த பந்து.. தலையில் பட்டு விழுந்த ரஷீத் கான்.. மயக்கம்.. மருத்துவர்கள் சோதனை!

லண்டன்: நேற்று ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானுக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்நாட்டு அணி வீரர்கள் கவலையில் இருக்கிறார்கள். ரஷீத் கானை மருத்துவர்கள் தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிரடியாக ஆட கூடிய வீரர்கள் மிகவும் குறைவு. அந்த அணியில் மூன்று முக்கிய வீரர்கள்தான் தற்போது உலகம் முழுக்க வைரலாக இருகிறார்கள்.

அதில் ஒருவர் ரஷீத் கான், இன்னொருவர் முஜீப் உர் ரகுமான். இவர்கள் இருவரும் ஐபிஎல் மூலம் வைரலானவர்கள். இன்னொருவர் அணியின் கீப்பர் முகமது ஷாஷாத்.

ரஷீத் கான்

ரஷீத் கான்

இதில் ரஷீத் கான் மிக முக்கியமான வீரர். சரியாக சொல்ல வேண்டும் என்றால் ரஷீத் கான்தான் ஆப்கானிஸ்தான் அணியின் அடையாளம் என்று கூட சொல்லலாம். ஆம், அந்த அளவிற்கு அவர் உலகம் முழுக்க பிரபலம். வெறும் 21 வயதில் அவர் அந்த அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி மிக மோசமாக ஆடி விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் களமிறங்கினார். இவர் அதிரடியாக ஆடி ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

காயம் அவுட்

காயம் அவுட்

ஆனால் 3 பந்துகள் பிடித்த ரஷீத் 4வது பந்தில் லோகி பெர்குசான் போட்ட ஓவரில் காயம் அடைந்தார். தலையில் பட்ட பவுன்சர் பந்து ஸ்டெம்பில் பட்டு விக்கெட் ஆனது. இந்த பந்து 142 கிமீ வேகத்தில் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தலையை பிடித்துக் கொண்டு வேகமாக ரஷீத் கான் பெவிலியன் சென்றார்.

இரண்டு முறை மயக்கம்

இரண்டு முறை மயக்கம்

அங்கு சென்றவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அந்த சோதனையை அடுத்த, அன்றைய போட்டியில் அவர் அதற்கு மேல் களமிறங்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவர் அதன்பின் ஓய்வு எடுத்தார். தலையில் பந்து பட்டதில் அவருக்கு தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

மிக மோசம்

மொத்தமாக இரண்டு முறை அவருக்கு லேசாக மயக்கம் வந்து மீண்டும் இருக்கிறார். இதனால் இரண்டு முறை அவரை சோதனை செய்தனர். தற்போதும் அவரை மருத்துவர்கள் தொடர்ந்த சோதனை செய்து வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் அடுத்து இறங்கும் போட்டியில் இவர் களமிறங்குவார். ஆனால் அதற்குள் கண்டிப்பாக இவர் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும். இந்த காயம் காரணமாக அந்நாட்டு அணி வீரர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC World Cup 2019: Rashid Khan fails 2 consecutive concussion test after a blow to head against New Zealand.
Story first published: Sunday, June 9, 2019, 12:39 [IST]
Other articles published on Jun 9, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X