கோலி கொடுத்த மேஜிக் பேட்டை திருடிவிட்டார்கள்.. ரஷித் கான் புலம்பல்.. திருடியது யார் தெரியுமா?

ICC World Cup 2019 :கோலி கொடுத்த பேட், திருடுபோய்விட்டது.. புலம்பும் ரஷீத் கான்- வீடியோ

லண்டன்: இந்திய கேப்டன் கோலி தனக்கு பரிசாக கொடுத்த மேஜிக் பேட் ஒன்றை திருடிவிட்டார்கள் என்று ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் புலம்பி வருகிறார்.

தற்போது கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான வீரராக ரஷீத் கான் உருவெடுத்து உள்ளார். ஆப்கானிஸ்தான் அணியில் இருக்கும் இவர் உலகின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக மாறியுள்ளார்.

பந்து வீச்சு மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் இவர் மிகவும் சிறப்பானவர். தற்போது நல்ல ஆல் ரவுண்டராக இவர் உருவாகிக் கொண்டு இருக்கிறார்.

இனிதான் நாகினி டான்ஸ்.. விஸ்வரூபம் எடுத்திருக்கும் வங்கதேசம் டீம்.. இதுதான் வெற்றிக்கு காரணம்!

கோலி நண்பர்

கோலி நண்பர்

ஐபிஎல் போட்டி காரணமாக தற்போது அனைத்து அணியை சேர்ந்த வீரர்களும் இந்திய அணியின் வீரர்களுக்கு நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். வெவ்வேறு அணி வீரர்கள் ஒரே அணியில் இருப்பதால், இந்திய வீரர்களுக்கு பல புதிய நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். இதனால் தற்போது ரஷீத் கானும் கோலியும் கூட நல்ல நண்பர்களாகி உள்ளனர்.

பரிசு கொடுத்தனர்

பரிசு கொடுத்தனர்

இதையடுத்து கோலி, ரஷீத் கானுக்கு பேட் பரிசு ஒன்று கொடுத்து உள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியில் இந்த பரிசை அவர் ரஷீத்துக்கு கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதை பாராட்டும் வகையில் கோலி இந்த பரிசை கொடுத்துள்ளார்.

பாண்டியாவும்

பாண்டியாவும்

அதேபோல் பாண்டியாவும் இதேபோல் பேட் ஒன்றை பரிசாக ரஷீத் கானுக்கு கொடுத்து இருக்கிறார். இந்த இரண்டு பேட்டுகளையும் ரஷீத் கான் முக்கியமான போட்டிகளில் மட்டும்தான் பயன்படுத்தி வருகிறாராம். ரொம்ப அவசியம் இருக்க கூடிய போட்டிகளில் மட்டும்தான் இந்த இரண்டு பேட்டையும் அவர் பயன்படுத்தி வருகிறாராம்.

கோலி பேட்

கோலி பேட்

இந்த நிலையில் கோலி கொடுத்த பேட் குறித்து பேசிய ரஷீத், கோலி கொடுத்த பேட் மிகவும் ராசியானது. அதில் நான் ஒருமுறை பவுண்டரி அடிக்க முயன்றேன். ஆனால் அது சிக்ஸ் சென்றது. எனக்கு இது பெரிய ஆச்சர்யமாக இருந்தது. நான் அந்த பேட்டில் சிறிய ஷாட் அடிக்க முயன்றால் கூட அது பெரிய ஷாட்டாக மாறும். எனக்கே அது பல முறை ஆச்சர்யமாக இருந்துள்ளது.

பேட் திருட்டு

பேட் திருட்டு

ஆனால் அந்த பேட்டை தற்போது திருவிட்டார்கள். பேட்டை என் கண் முன்பே எடுத்துக் கொண்டு சென்றார்கள். எங்கள் அணியின் மூத்த வீரர் அஸ்கார் ஆப்கான் என் பேக்கில் இருந்து அந்த பேட்டை எடுத்துக் கொண்டு சென்றார். என் கண்ணுக்கு முன்பே அதை அவர் திருடினார்.

என்னிடம் பேசினார்

என்னிடம் பேசினார்

என்னிடம் அதன்பின் வந்து, அந்த பேட்டில் நீ சிறப்பாக விளையாடினாய். இனி அது என்னுடைய பேட். அது ரொம்ப ராசியாக இருக்கிறது. நானே வைத்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். அவர் அந்த பேட்டில் சரியாகவே விளையாட கூடாது என்று சாபம் விடுகிறேன், என்று ரஷீத் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். அவர் அந்த பேட்டை வைத்துக் கொள்ளட்டும் என்று ரஷீத் பின் குறிப்பிட்டார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
ICC World Cup 2019: Rashid Khan says that the bat gifted by Kohli has been stolen by his teammate.
Story first published: Monday, June 3, 2019, 12:15 [IST]
Other articles published on Jun 3, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X