For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விலகி இருப்பதே சிறந்தது.. என்ன ரோஹித் சர்மா இப்படி பேசிட்டார்.. திடுக் பேட்டியால் ரசிகர்கள் ஷாக்!

இந்திய அணி வீரர் ஜடேஜா மற்றும் சஞ்சய் மஞ்சிரேக்கர் இடையில் நிலவி வரும் சண்டை குறித்து ரோஹித் சர்மா தெரிவித்த கருத்து பெரிய சர்ச்சையாகி உள்ளது.

லண்டன்: இந்திய அணி வீரர் ஜடேஜா மற்றும் சஞ்சய் மஞ்சிரேக்கர் இடையில் நிலவி வரும் சண்டை குறித்து ரோஹித் சர்மா தெரிவித்த கருத்து பெரிய சர்ச்சையாகி உள்ளது.

மும்பை சேர்ந்த சஞ்சய் மஞ்சிரேக்கர் கிரிக்கெட் உலகில் சர்ச்சை மேல் சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். இவர் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக இருக்கிறார்.

மும்பை சேர்ந்தவர் என்பதால் மற்ற மாநிலங்களில் சேர்ந்த வீரர்களை இவர் மோசமாக கமெண்ட் செய்வார். இந்த நிலையில் இவர் கடந்த இந்தியா வங்கதேசம் போட்டியின் போது இந்திய வீரர் ஜடேஜாவை மோசமாக விமர்சனம் செய்து இருந்தார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இவர் ஜடேஜாவை ''உதிரி விக்கெட்டுகள், ரன்களை எடுக்கும் வீரர்.. அவரை அணியில் எடுக்க கூடாது'' என்று அவமானப்படுத்தினார். போட்டி முழுக்க ஜடேஜாவை கிண்டலாக பல முறை விமர்சனம் செய்து கொண்டே இருந்தார். இதற்கு பதில் அளித்த ஜடேஜா நான் என் வாழ்க்கையில் உங்களை விட அதிக போட்டிகளை விளையாடி இருக்கிறேன் சார். உங்கள் வாயில் இருந்து வயிற்றுப்போக்கு வருவது போல பேசுகிறீர்கள்.. போதும், என்று கோபமாக குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த நிலையில் நேற்று கோலி, ஜடேஜாவை அணியில் எடுத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா விளையாடினார். இது மஞ்சிரேக்கருக்கு கண்டிப்பாக பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கும்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில் இதுகுறித்து ரோஹித் சர்மா தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் அதில் எல்லாம் கவனம் செலுத்த மாட்டேன். விளையாட்டு வீரர்கள் என்று வந்துவிட்டால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். இது ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களை பொறுத்தது. இந்த விஷயத்தை அவர் எப்படி அணுகுகிறார் என்பதை பொறுத்ததே இந்த பிரச்சனை. நான் இதில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்.

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

இங்கு விளையாட வந்திருக்கிறோம். அதை சரியாக செய்ய வேண்டும். அது மட்டும்தான் எங்கள் வேலை. சிலர் பேசுவதில் எல்லாம் எங்கள் கவனத்தை சிதற விட கூடாது. சிலரிடம் இருந்து விலகி இருப்பது சிறந்தது. அதுதான் எங்கள் விளையாட்டிற்கு உதவும் என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டு இருக்கிறார்.

பலர் எதிர்ப்பு

பலர் எதிர்ப்பு

இந்த நிலையில் பலர் ரோஹித் சர்மாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். ரோஹித் சர்மா மஞ்சிரேக்கருக்கு எதிராக கருத்து தெரிவித்து இருக்க வேண்டும். சக வீரரான ஜடேஜாவிற்கு ஆதரவாக பேசி இருக்க வேண்டும். ஆனால் ரோஹித் அப்படி செய்யவில்லை. இது துணை கேப்டனுக்கு அழகு கிடையாது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, July 7, 2019, 16:10 [IST]
Other articles published on Jul 7, 2019
English summary
ICC World Cup 2019: Deputy Skipper Rohit Sharma comment on Jadeja and Sanjay goes viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X