For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்ச்சையில் தோனியின் பேட்.. ரூ.13 கோடி கேட்கும் சச்சின்..ஆஸ்திரேலியாவில் வழக்கு.. அதிர்ச்சி செய்தி

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு எதிராக வழக்கு தொடுத்து இருக்கிறார்.

சிட்னி: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு எதிராக வழக்கு தொடுத்து இருக்கிறார். அவர் தொடுத்த வழக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது லண்டனில் நடந்து வருகிறது. தினமும் போட்டிகளில் ஏதாவது சர்ச்சைகள், விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து பெரிய வைரலாகிறது.

சமயங்களில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு அதுவும் பெரிய சர்ச்சைக்கு உள்ளாகிறது. இதனால் இந்த உலகக் கோப்பை தொடர் இப்போதே வைரலாகி உள்ளது.

கனமழையிலும் தோனிக்காக காத்திருந்த ரசிகர்கள்.. வெளியே வந்த தல.. என்ன ரியாக்சன் கொடுத்தார் பாருங்க! கனமழையிலும் தோனிக்காக காத்திருந்த ரசிகர்கள்.. வெளியே வந்த தல.. என்ன ரியாக்சன் கொடுத்தார் பாருங்க!

சச்சின் எப்படி

சச்சின் எப்படி

தற்போது சச்சின் டெண்டுல்கர் லண்டனில் ஐசிசி சார்பாக போட்டிகளில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இவர் இந்திய அணி விளையாடும் போட்டிகளில் மட்டும் வர்ணனை செய்து வருகிறார். அதே சமயம் இந்திய அணிக்கு இவர் தேவையான நேரங்களில் சரியான ஆலோசனையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை என்ன

சர்ச்சை என்ன

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு எதிராக வழக்கு தொடுத்து இருக்கிறார். அவர் தொடுத்த வழக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா நிறுவனமான ஸ்பார்ட்டன்ஸ் ஸ்போர்ட்ஸ் உலகம் முழுக்க பிரபலமானது. இதை பல முன்னணி வீரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

தோனி பயன்படுத்தி வருகிறார்

தோனி பயன்படுத்தி வருகிறார்

ஸ்பார்ட்டன்ஸ் பேட்டை தற்போது தோனியும் பயன்படுத்தி வருகிறார். முதலில் ரீபோக் பேட்டை பயன்படுத்திய தோனி தற்போது ஸ்பார்ட்டன்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பேட்டைத்தான் பயன்படுத்தி வருகிறார். இதற்கு விளம்பரதாரராக சச்சின் நியமிக்கப்பட்டார். கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் சச்சின் விளம்பரதாரராக நியமிக்கப்பட்டார்.

என்ன ஒப்பந்தம்

என்ன ஒப்பந்தம்

இதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்பார்ட்டன்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் சச்சினுக்கு மொத்தம் 13 கோடி ரூபாய் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அந்த நிறுவனம் இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இதனால் அந்த நிறுவனத்திற்கு எதிராக சச்சின் வழக்கு தொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இது தொடர்பாக சச்சின் வழக்கு தொடுத்துள்ளார். தன்னுடைய புகைப்படம் மற்றும் பெயரை விளம்பரங்களில் பயன்படுத்திவிட்டு பின் தன்னை ஏமாற்றிவிட்டனர் என்று ஸ்பார்ட்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சச்சின் வழக்கு தொடுத்து உள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Story first published: Friday, June 14, 2019, 15:26 [IST]
Other articles published on Jun 14, 2019
English summary
ICC World Cup 2019: Sachin files case against Australia's Spartans Sports for cheating him.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X