For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு ஏன் மெசேஜ் செய்கிறார்.. பெண் ஒருவரால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய முகமது ஷமி.. பரபரப்பு!

இந்திய அணியின் பவுலிங் புயல் முகமது ஷமி பெண் ஒருவருக்கு தேவை இல்லாமல் மெசேஜ் செய்து சர்ச்சையில் மாட்டி உள்ளார்.

Recommended Video

பெண் ஒருவரால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய முகமது ஷமி

லண்டன்: இந்திய அணியின் பவுலிங் புயல் முகமது ஷமி பெண் ஒருவருக்கு தேவை இல்லாமல் மெசேஜ் செய்து சர்ச்சையில் மாட்டி உள்ளார்.

இந்திய அணியின் முன்னணி பவுலர் முகமது ஷமி மீது பாலியல் குற்றச்சாட்டு இருக்கிறது. ஷமியின் மனைவி ஹசின் ஜகான்தான் இந்த புகாரை வைத்தது.

முகமது ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். அதேபோல் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக ஹசின் ஜகான் கூறினார்.

இவர் உள்ளே.... அவர் வெளியே..!! நியூசி.க்கு எதிராக கோலியின் அசர வைக்கும் பிளான் இவர் உள்ளே.... அவர் வெளியே..!! நியூசி.க்கு எதிராக கோலியின் அசர வைக்கும் பிளான்

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

அதன்பின் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் ஷமி குறித்த புகார் பிசிசிஐ மூலம் விசாரிக்கப்பட்டது. தற்போது ஷமியின் குழந்தைகள் அவரின் மனைவியுடன் இருக்கிறார்கள். ஹசின் ஜகான் சொன்ன சூதாட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இப்போதும் இருவரும் பிரிந்துதான் இருக்கிறார்கள்.

சிக்கல்

சிக்கல்

இந்த நிலையில் தற்போது ஷமி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதன்படி அவர் இங்கிலாந்தில் இருந்து கொண்டு சோபியா என்ற பெண்ணுக்கு மதிய வணக்கம் என்று தேவையே இல்லாமல் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் டிவிட்டரில் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டு உள்ளார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

அட கடவுளே

அதில் அந்த பெண், ஏன் இத்தனை பின் தொடர்பாளர்கள் இருக்கும் கிரிக்கெட் வீரர் ஒருவர் எனக்கு மெசேஜ் செய்து கொண்டு இருக்கிறார் என்று கேள்வி எழுப்பி, அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை இன்னொருவர் ஷேர் செய்து, ஷமிக்கு இங்கிலாந்தில் வேலையே இல்லை போல என்று கிண்டல் செய்துள்ளார்.

பெரிய வைரல்

இந்த புகைப்படங்கள் வெளியானதை அடுத்து இணையம் முழுக்க ஷமி மீண்டும் வைரலாகி வருகிறார். அவரின் மனைவி சொன்ன புகார் உண்மைதான் போல. அவர் அங்கே கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டு, அதில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார் என்று பலர் டிவிட்டரில் அவரை கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏன் புகார்

ஏன் புகார்

இன்னும் சிலர் இவர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட கூறி உள்ளனர். ஆனால் ஷமி தான் விளையாடிய போட்டிகளில் எல்லாம் மிகவும் சிறப்பாக பங்களித்தார். இரண்டு போட்டிகளில் நான்கு நான்கு விக்கெட்டுகள், ஒரு போட்டியில் ஐந்து விக்கெட் என்று 13 விக்கெட்டுகள் அவர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 9, 2019, 13:22 [IST]
Other articles published on Jul 9, 2019
English summary
ICC World Cup 2019: Mohammed Shami gets into controversy after sends message to an unknown lady.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X