For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாட்ச்மேன் வீட்டில் சூப்பர்மேன்.. கோபத்தில் ஆடிய ஜடேஜா.. நேற்றைய அதிரடிக்கு இப்படி ஒரு பின்கதையா?

Recommended Video

Super Man Jadeja : நேற்றைய ஜடேஜாவின் அதிரடிக்கு இப்படி ஒரு பின் கதையா?- வீடியோ

லண்டன்: நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆடிய அதிரடி ஆட்டத்திற்கு பின் பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அவர் மிகவும் கோபத்துடன்தான் களமிறங்கி ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டி நேற்று மிகவும் பரபரப்பாக சென்றது. முக்கியமாக கடைசி மூன்று ஓவர்கள் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு பரபரப்பின் உச்சத்தை தொட்டது.

இந்த போட்டியில் இந்திய அணி மோசமாக திணறிக்கொண்டு இருந்தது. அப்போதுதான் சரியாக இந்திய அணிக்காக விளையாட ஜடேஜா களமிறங்கினார். அவரும் தோனியும் இறங்கிய பின் மொத்தமாக ஆட்டம் மாறியது.

தோனி மீது உங்களுக்கு என்ன காழ்ப்புணர்ச்சி.. வீடியோ போட்டு அவமானப்படுத்திய ஐசிசி.. கொந்தளிப்பு! தோனி மீது உங்களுக்கு என்ன காழ்ப்புணர்ச்சி.. வீடியோ போட்டு அவமானப்படுத்திய ஐசிசி.. கொந்தளிப்பு!

சூப்பர் ஆட்டம்

சூப்பர் ஆட்டம்

ஒரு பக்கம் ஜடேஜா அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் தோனி பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 97 ரன்கள் எடுத்தனர். மொத்தம் 59 பந்துகள் பிடித்த அவர் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் என்று 77 ரன்கள் எடுத்தார். மிக மோசமாக தோல்வி அடைய வேண்டிய போட்டியை இந்தியா பக்கம் இவர்தான் நகர்த்தினார்.

என்ன வரலாறு

என்ன வரலாறு

நேற்றைய போட்டியில் இவர் சிறப்பாக ஆட முக்கிய காரணம் இவருக்கு இருக்கும் அனுபவம் என்பதுதான் முதல் காரணம். ரஞ்சி போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடிய இவர் முதல் தர போட்டிகளில் மூன்று முச்சதங்களை அடித்துள்ளார். 192 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல் ஒருநாள் போட்டிகளில் 176 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

பேட்டிங் சிறப்பு

பேட்டிங் சிறப்பு

அதேபோல் 7வது வீரராக களமிறங்கி இவர் பேட்டிங்கில் 32.28 டெஸ்ட் மற்றும் 30.60 ஒருநாள் ஆவரேஜ் வைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக இதை விட சிறப்பாக இவர் விளையாடி உள்ளார். இந்த நீண்ட அனுபவம்தான் நேற்று போட்டியில் அவருக்கு பெரிதும் உதவியது. நேற்றைய போட்டியில் இவர் அதிரடியாக ஆட சில முக்கிய சம்பவங்களும் காரணம் ஆகும்.

ராணுவம்

ராணுவம்

குஜராத் ஜாம்நகரில் பிறந்த இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்றுதான் ஆசை பட்டு இருக்கிறார். ஆனால் இவரின் அப்பா இவரை ராணுவ வீரர் ஆக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இவர் அப்பா தனியார் நிறுவனம் ஒன்றில் அப்போது வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா இல்லை

அம்மா இல்லை

இவரின் அம்மா 2005ல் விபத்தில் மரணம் அடைந்தார். அதன்பின்தான் இவருக்கு இந்திய அணியில் தாமதமாக வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக முக்கிய நபராக உயர்ந்தார். தோனி, அணியின் கேப்டனாக உயர்ந்த பின், இவருக்கு அணியில் நிலையான இடம் கிடைத்தது.

கேப்டன்

கேப்டன்

ஆனால் தோனி போய் கோலி வந்த பின் ஜடேஜா, அணியில் புறக்கணிப்பிற்கு உள்ளானார். நன்றாக விளையாடியும் இவரும் அஸ்வினும் அணியில் புறக்கணிக்கப்பட்டார்கள். ஜடேஜா முதல்தர போட்டிகளில் சரியாக ஆடினாலும் கூட அணியில் இடம்பெற முடியாமல் கஷ்டப்பட்டார். குல்தீப் - சாஹல் வருகைக்கு பின் அணியில் மொத்தமாக காணாமல் போனார்.

என்ன காரணம்

என்ன காரணம்

நேற்று ஜடேஜாவின் கோபமான ஆட்டத்திற்கு பின் இந்த புறக்கணிப்பும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல அனுபவம் இருந்தும். பல்வேறு போட்டியில் சிறப்பாக விளையாடியும் கூட உலகக் கோப்பையில் கடைசியில்தான் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

மஞ்சிரேக்கர்

மஞ்சிரேக்கர்

அதேபோல் நேற்று நடந்த போட்டியில் ஜடேஜா தன்னை நிரூபித்தால்தான் அவருக்கான அடையாளம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியும். இனி வரும் போட்டிகளில் அவர் அணியில் இடம்பெற வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக நேற்று சரியாக ஆட வேண்டும். அதை உணர்ந்து சிறப்பாக ஜடேஜா ஆடினார்.

இதுதான் அடையாளம்

இதுதான் அடையாளம்

அதேபோல் நேற்று நடந்த போட்டியில் ஜடேஜா தன்னை நிரூபித்தால்தான் அவருக்கான அடையாளம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியும். இனி வரும் போட்டிகளில் அவர் அணியில் இடம்பெற வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக நேற்று சரியாக அட வேண்டும். அதை உணர்ந்து சிறப்பாக ஜடேஜா ஆடினார்.

செம

செம

இந்த தொடர் முழுக்க அவரை பலர் பார்ம் இல்லாத வீரர் என்று கிண்டல் செய்தனர். ஆனால் அனைத்திற்கும் தற்போது ஜடேஜா பதிலடி கொடுத்து இருக்கிறார். நேற்றைய போட்டியில் அவரின் ஆட்டத்திற்கு பலன் இல்லாமல் போய் இருக்கலாம்.. அவரால் போட்டியை வெல்ல முடியவில்லை.. ஆனால் 120 கோடி பேரின் மனங்களை அவர் வென்றார்.

Story first published: Thursday, July 11, 2019, 17:04 [IST]
Other articles published on Jul 11, 2019
English summary
ICC World Cup 2019: Super Man from the house of a watchman- The story of the all-rounder Sir Jadeja.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X