For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 வருட சோகம்.. மனைவியுடன் பிரச்சனை.. பிசிசிஐ புறக்கணிப்பு.. கோபத்தை களத்தில் காட்டிய ஷமியின் கதை!

லண்டன்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ஷமி எடுத்த 4 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றியது. ஆனால் இதற்காக ஷமி கடந்து வந்த தொலைவு என்பது மிக கடுமையானது. யாரும் நினைக்காத மேடு பள்ளங்களை கொண்டது.

4 வருடத்திற்கு முன் இந்திய அணியின் 2019 உலகக் கோப்பை அணிக்கு முதற்கட்டமாக தேர்வாக இருந்தவர்தான் ஷமி. ஆம் அவருடன் இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை அனுப்ப வேண்டும் என்பதே இந்திய அணியின் திட்டமாக இருந்தது. ஆனால் போக போக நிலைமை மாறியது.

2016 மத்தியில் அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் அவரை முடக்கி போட்டது. இதனால் அவர் செய்து கொண்ட ஆபரேஷன் காரணமாக அவர் 2 வருடம் வரை சரியாக அணியில் இடம்பெற முடியாமல் கஷ்டப்பட்டார்.

கடந்த வருடம்

கடந்த வருடம்

காயம் அவரை தொடர்ந்து வாட்டியது. கடந்த வருடம் இவர் யோ யோ டெஸ்ட்டில் கூட தோல்வி அடைந்தார். ஆம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு முன் செய்யப்பட்ட யோ யோ டெஸ்டில் இவர் தோல்வி அடைந்தார். அதனால் அந்த தொடரில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு இவரின் பார்ம் மிக மோசமாக பாதாளத்தை தொட்டது.

அவருக்கான வாய்ப்பு

அவருக்கான வாய்ப்பு

அப்போது அவருக்கு இரண்டு வாய்ப்புதான் இருந்தது. ஒன்று அப்படியே முடங்கி போய், இர்பான் பதான் போல கமெண்ட்ரி செய்ய கிளம்புவது. இல்லையென்றால் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு, உலகிற்கு நிரூபணம் செய்வது. அவர் தேர்வு செய்தது இரண்டாவது ஆப்ஷனை. ஆம், அவர் வீட்டில் முடங்கவில்லை, மாறாக தன்னை ஜிம்மிற்குள் முடக்கிக் கொண்டார்.

மனைவி பிரச்சனை

மனைவி பிரச்சனை

அவருக்கு உடலில் பிரச்சனை இருந்த அதே நேரத்தில் அவரின் மனைவி ஹசின் ஜஹான் உடனும் பிரச்சனை இருந்தது. ஷமி மீது ஹசின் சூதாட்ட புகார் கூட வைத்து இருந்தார். அது தவறு என்று நிரூபிக்கப்ட்டது. இதனால் அவர் தனது குழந்தையை பிரிய நேர்ந்தது. பிசிசிஐ அப்போதில் இருந்து அவரை கொஞ்சம் தள்ளியே வைத்து இருந்தது. அடிக்கடி அவரை புறக்கணிக்க தொடங்கியது.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

இந்திய அணியில் ஷமி தன்னை நிரூபிக்கும் முன் பும்ராவும் , புவனேஷ்வர்குமாரும் இந்திய அணியில் பெரிய வீரர்களாக வளர்ந்து இருந்தனர். இதனால் ஷமி அடுத்த கட்ட சோதனைக்கு தயார் ஆனார். இவர்கள் இருவரை விட தன்னை சிறந்தவர் என்று நிரூபிக்க வேண்டிய சூழநிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும் ஷமி பல பிரச்சனைகளுக்கு இடையில் அதை கடந்து வந்தார்.

நிரூபித்தார்

நிரூபித்தார்

அதன்பின்தான் ஷமி தன்னை யோ யோ டெஸ்டில் நிரூபணம் செய்தார். அதோடு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வானார். வரிசையாக தனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நிரூபணம் செய்து கொண்டு வந்தார். இந்த வருடம் முழுக்க அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் ஷமிதான். ஆனால் அவர் ஆடிய போட்டிகள் மற்ற இரண்டு பவுலர்களை விட குறைவான போட்டிகள்தான்.

ஆனாலும் எப்படி

ஆனாலும் எப்படி

அதேபோல் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணியில் முக்கியமான வீரராக இருந்தார். இந்திய அணியின் அதிக வேகத்தில், அதிக வேரியேஷன் காட்டும் வீரர் தற்போது இவர்தான். பும்ராவை விட இவர் அதிக வேகத்தில் பந்து வீசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷமி இத்தனை செய்தும் இந்த உலகக் கோப்பை போட்டியில் மூன்றாவது பவுலிங் ஆப்ஷனாகத்தான் தேர்வானார்.

செய்தார்

செய்தார்

புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயம்தான் இவருக்கு கிடைத்த அந்த வாய்ப்பு.. அதை சரியாக ஆப்கானிஸ்தான் போட்டியில் பயன்படுத்திக் கொண்டார். அப்போதே அவர் 4 விக்கெட் எடுத்தார். இதில் ஒரு ஹாட் டிரிக். ஆனால் அப்போதும் கூட இவரது இடம் உறுதியாகவில்லை. நேற்று போட்டியில் இவர் ஆடுவது சந்தேகமாகத்தான் இருந்தது. இதனால்தான் நேற்று மேற்கு இந்திய தீவுகளின் பேட்ஸ்மேன்கள் படையை மொத்தமாக சரித்தார்.

எத்தனை விக்கெட்

எத்தனை விக்கெட்

நேற்று இவர் எடுத்த 4 விக்கெட் என்பது.. இந்திய அணிக்காக மட்டும் எடுத்த விக்கெட் அல்ல. அது அவர் மீது போலியான சூதாட்ட புகார் கொடுத்த மனைவிக்காக எடுத்தது.. தன்னை புறக்கணித்த பிசிசிஐக்கானது.. ஒன்றுமில்லாத யோயோ டெஸ்டுக்கானது.. புவனேஷ்வர் குமார் வந்தால் ஷமி அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்று தெரியாது.. அவர் மீண்டும் குகைகள் அடக்கி வைக்கப்படலாம்.. ஆனால் சிங்கம் எங்கு இருந்தாலும் சிங்கம்தான்.. குகையில் இருந்தாலும்!

Story first published: Friday, June 28, 2019, 12:11 [IST]
Other articles published on Jun 28, 2019
English summary
ICC World Cup 2019: The Man who lost to yo-yo to a bowler of the match- Story of Mohammed Shami.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X