For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போர் பூமியின் ஹீரோ.. 20 வயதில் ஆஸ்திரேலிய பவுலர்களை பறக்கவிட்ட ரஷீத் கான்.. சோக வரலாறு!

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் ரஷீத் கான் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

Recommended Video

World cup 2019 AUS VS AFG | ஆஸ்திரேலியாவின் பௌலிங்கை சமாளித்து ஆப்கானிஸ்தான் போராட்டம்!

லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

ஒரு போர் தேசம்.. போருக்கு மத்தியிலும் சில பூக்களை உருவாக்கும். அந்த பூக்கள் என்றாவது ஒருநாள் வனமாக மாறும். அப்படித்தான் தற்போது ஆப்கானிஸ்தான் ரஷீத் கான் என்ற பூவை உருவாக்கி உள்ளது.

இன்னும் சில வருடங்களில் அந்நாட்டின் கிரிக்கெட் அணி ஒரு பூஞ்சோலையாக மாறும். அதற்கு விதை.. ரஷீத் கான் போட்டது.

என்ன மேட்ச்

என்ன மேட்ச்

நேற்று ஆஸ்திரேலியாவிற்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடந்தது. மிகவும் அதிரடியாக ஆடிய, ஆப்கானிஸ்தான் 38.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய 34.5 ஓவரில் 3 விக்கெட்டிற்கு 209 ரன்கள் எடுத்து வென்றது.

வெற்றி காரணம்

வெற்றி காரணம்

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு ரஷீத் கான் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லோரின் பந்தையும் ரஷீத் கான் நேற்று பறக்கவிட்டார் என்றுதான் கூற வேண்டும். மிக சிறிய இன்னிங்ஸ் ஆடினாலும், ஆஸ்திரேலிய பவுலர்கள் அவரின் ஆட்டத்தை பார்த்து கலங்கிப் போனார்கள்.

ஆப்கானிஸ்தான் வீரர்

ஆப்கானிஸ்தான் வீரர்

ரஷீத் கான் ஆப்கான் அணியின் ஆல்ரவுண்டர். இவருக்கு 20 வயது மட்டுமே ஆகிறது. போர் தேசமான ஆப்கானின் வறுமையான குடும்பத்தில் பிறந்ததில் இருந்து இவருடைய வாழ்க்கைக்கான போரும் தொடங்கிவிட்டது. நங்கர்ஹர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் 15 வயது வரை டென்னிஸ் பந்தில் தெருவில் விளையாடி இருக்கிறார்.

எப்படி சூப்பர்

எப்படி சூப்பர்

ஆனால் அசாத்திய திறமை அணிக்கு வந்து வெறும் மூன்று வருடத்தில் இவரை உலக வைரலாக்கி இருக்கிறது. தற்போது இவர்தான் சர்வதேச டி-20 நம்பர் ஒன் பவுலர்களில் ஒருவர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட் எடுத்த வீரர் இவர்தான். பவுலிங்கில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் பொறி பறக்க விடுகிறார்.

ரொம்ப மோசம்

ரொம்ப மோசம்

இவருக்கு சிறு வயதில் சாப்பிட கூட வீட்டில் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இவரது வளர்ச்சியும் பாதியில் நின்றது. ஆனால் விடாமல் பள்ளி அணி, கிளப் அணி, உள்ளூர் அணி, மாநில அணி என்று இவர் கொஞ்சம், கொஞ்சமாக வறுமையோடும், எதிரணி பவுலருடனும் மோதி முன்னேறினார்.

எங்கு சேர்ந்தார்

எங்கு சேர்ந்தார்

முதலில் இவர் ஆப்கான் ஏ அணியில் சேர்ந்தார். அன்று முதல் இவர் தன்னுடைய ஸ்பின் மூலம் இளம் வீரர்களை திணறடித்தார். ஆனால் இரண்டு வருடம் வரை அவர் அங்குதான் விளையாட வேண்டி இருந்தது. அவரது உடல் அமைப்பு கிரிக்கெட் வீரர் போல இல்லை என்று சக வீரர்கள் கிண்டல், கேலிகள் செய்து இருக்கிறார்கள்.

முதல்முறை அணிக்கு வந்தார்

முதல்முறை அணிக்கு வந்தார்

அதன்பின் அக்டோபர் 18, 2015 ஜிம்பாபேவ் அணிக்கு எதிராக முதல்முறையாக ஆப்கான் அணிக்காக விளையாடினார். மற்ற ஆப்கான் வீரர்கள் போல இவருக்கு என்ன திறமை இருந்துவிட போகிறது என்றுதான் இந்த உலகமே நினைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் அந்த கிரிக்கெட் உருவம் இல்லாத உடலுக்குள் வேறு ஒரு திட்டம் இருந்தது. அந்த ஒருநாள் போட்டி ஒன்றும் அவர் வாழ்க்கையை மாற்றவில்லை.

சூப்பராக விளையாடினார்

சூப்பராக விளையாடினார்

ஐயர்லாந்திற்கு எதிராக நடந்த டி-20 போட்டி ஒன்றில் இவர் 5 விக்கெட் எடுத்தார். அந்த அணியை மொத்தமாக தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அவர் கொடுத்தது மொத்தமாக 3 ரன் மட்டுமே! 2017ம் வருடம் இவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வெறும் 18 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் எடுத்தார். சென்ற வருடம் மட்டும் இவர் 60 விக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார்.

ஐபிஎல்

ஐபிஎல்

அதோடு இல்லாமல் சென்ற வருடம் இவரை சன்ரைசர்ஸ் அணி 4 கோடி கொடுத்து வாங்கியது. ஒரு ஆப்கான் வீரர் இவ்வளவு விலைக்கு ஏலம் போனது அதுவே முதல்முறை ஆகும். 32 ஐசிசி ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 112 விக்கெட்டுகள் எடுத்து பெரிய சாதனை செய்துள்ளார்.

ஹைதராபாத் ஏன்

ஹைதராபாத் ஏன்

ஹைதராபாத் அணி 9 கோடி கொடுத்து எடுத்துள்ளது. அனைத்து அணிகளும் இவருக்கு போட்டியிட்ட நிலையில் ஆர்டிஎம் மூலம் இவர் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஹைதராபாத் அணிக்காக இவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது. 2018 ஐபிஎல்லில் இவர் மிகச்சிறப்பாக விளையாடினார்.

கேப்டன் பொறுப்பு

கேப்டன் பொறுப்பு

தொடர் சாதனையால் கிரிக்கெட் உலகம் இவரை கவனிக்க தொடங்கியது. சென்ற வருடம் ஐசிசி மிக முக்கியமான வீரர்களின் பட்டியலில் இவரை வைத்து இருந்தது. இவர் ஐசிசியின் சிறந்த இணை வீரர் விருது வாங்கினார். இப்போது ஆப்கான் அணிக்கு தற்காலிக கேப்டனாக இருந்தார். தற்போது பவுலிங் பேட்டிங் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

என்ன ஆட்டம்

என்ன ஆட்டம்

நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இவர் 11 பாலில் 27 ரன்கள் அடித்தார். இதில் 3 சிக்ஸர் அடக்கம். அதேபோல் 2 பவுண்டரிகள் அடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவரின் ஆட்டத்தை பார்த்து ஆஸ்திரேலியா அணி மட்டுமில்லாமல் உலகக் கோப்பை விளையாடும் மற்ற அணிகளும் மிரண்டு போய் இருக்கிறது.

Story first published: Sunday, June 2, 2019, 9:55 [IST]
Other articles published on Jun 2, 2019
English summary
ICC World Cup 2019: The excellent story of War Country Hero Rashid Khan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X