For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அசிங்கமாக பேசியது போதும்.. கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.. சர்ச்சைக்கு உள்ளான முக்கிய அணி!

இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து எதிரணியை மோசமாக பேசி வருவதும், அசிங்கப்படுத்தி வருவதும் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகமாக நடந்து வருகிறது.

Recommended Video

World Cup 2019: England Sledging: தொடரும் நக்கல் பேச்சு.. சர்ச்சையில் முக்கிய அணி- வீடியோ

லண்டன்: இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து எதிரணியை மோசமாக பேசி வருவதும், அசிங்கப்படுத்தி வருவதும் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகமாக நடந்து வருகிறது. ஸ்லெட்ஜிங் என்பதையும் தாண்டி இது நீண்டு கொண்டு இருப்பதுதான் வேதனையான விஷயம்.

கிரிக்கெட் போட்டியில் ஸ்லெட்ஜிங் என்பதை அறிமுகப்படுத்திய அணி என்றால் அது ஆஸ்திரேலியா என்று கூட கூறலாம். அவர்கள்தான் ஒரு போட்டியின் போது வீரர்களை வார்த்தைகளால் சீண்டி அவர்களின் கவனத்தை சிதற வைப்பார்கள்.

இதன் மூலம் வீரர்கள் பலமுறை அவுட்டாகி இருக்கிறார்கள். அதேபோல் போட்டிக்கு முதல்நாள் செய்தியாளர்கள் சந்திப்பிலும் இதேபோலத்தான் எதிரணியை விமர்சனம் செய்து பேசி, அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்க செய்வார்கள்.

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

இதை எல்லா வீரர்களும் இப்போது உலகம் முழுக்க செய்கிறார்கள். கோலி செய்தியாளர் சந்திப்பில் கோபமாக பேசுவதும், பண்ட் கீப்பிங் செய்யும் போது வீரர்களை கிண்டல் செய்வதும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால் இங்கிலாந்து அணி கடந்த சில மாதங்களில் இதில் கொஞ்சம் எல்லை மீறி செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. முக்கியமாக ஆஸ்திரேலியா என்று வந்துவிட்டால், இங்கிலாந்து கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை.

என்ன செய்தது

என்ன செய்தது

கடந்த இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன் இயான் மோர்கன் இப்படித்தான் இலங்கை அணியை கிண்டல் செய்தார். இலங்கை அணியில் எல்லோரும் புது வீரர்கள். நாங்கள் எல்லாம் பத்து வருடமாக ஆடுகிறோம். இலங்கையில் உள்ளவர்களுக்கு அனுபவம் இல்லை. இலங்கை அணிதான் உலகக் கோப்பைக்கு சர்ப்ரைஸாக வந்திருக்கும் அணி என்று குறிப்பிட்டு கிண்டல் செய்தார்.

மிக வருத்தம்

மிக வருத்தம்

இது இலங்கை ரசிகர்களை பெரிய அளவில் மன வருத்தத்திற்கு உள்ளாக்கியது. ஆனால் அந்த போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்தை காலி செய்தது. இங்கிலாந்து அணியை ஒற்றை ஆளாக மலிங்கா சாய்த்த வரலாறு அன்றுதான் அரங்கேறியது. அதே கதைதான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் நடந்தது. ஆம் ஆஸ்திரேலியா அணியை தேவை இல்லாமல் சீண்டி இப்போது இங்கிலாந்து சிக்கலில் மாட்டியுள்ளது.

ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்மித்தும், வார்னரும் அமைதியாக இருக்க, தேவையில்லாமல் அவர்களின் பழைய உப்புத்தாள் சர்ச்சையை வைத்து இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறார்கள். அதிலும், நேற்று இயான் மோர்கன் செய்தியாளர் சந்திப்பிலேயே இதுகுறித்து பேசி இருந்தார். ஸ்மித்துக்கு ஆதரவாக கோலி நடந்தது போல நாங்கள் நடக்க மாட்டோம் என்று கூறினார். இதை ஆஸ்திரேலிய அணியை சீண்டியது.

மோசம்

மோசம்

இதோ இப்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் இங்கிலாந்து தோல்வி அடைந்துவிட்டது. இதனால் தற்போது எல்லோரும் இங்கிலாந்து அணியின் மோசமான சுபாவத்திற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். வீரர்களை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு இங்கிலாந்து ஆட்டத்தில் கவனம் செலுத்தலாம். மூன்று போட்டியில் நீங்கள் தோல்வி அடைந்துவிட்டீர்கள். இனியும் இப்படி பேசிக்கொண்டு இருக்க வேண்டாம் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, June 26, 2019, 13:04 [IST]
Other articles published on Jun 26, 2019
English summary
ICC World Cup 2019: Too much of sledging, They should stop it right now, The home team gets into controversy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X