For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன ஒரு வேகம்.. என்ன ஒரு துல்லியம்.. உலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ!

லண்டன்: வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் வீரர் எடுத்த ரன் அவுட் ஒன்று இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது.

உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான கட்டத்தில் நேற்று மேற்கு இந்திய தீவுகள், வங்கதேசம் அணி இரண்டும் மோதியது. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இந்த போட்டியில் வங்கதேசம் அணி அதிரடியாக வெற்றிபெற்று இருக்கிறது. வங்கதேசம் வீரர்கள் இந்த போட்டியில் மிகவும் அதிரடியாக ஆடினார்கள்.

இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 321 ரன்கள் எடுத்தது. இந்த வலுவான ஸ்கோரை எதிர்த்த வங்கதேசம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. வங்கதேசம் அணி எளிதாக இந்த போட்டியில் வென்றது. வெறும் 41.3 ஓவர்களில் வங்கதேசம் 322 ரன்களை எடுத்து வென்றது.

கிரிக்கெட் வரலாற்றில் 21 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த அரிய சம்பவம்.. இதை பாருங்க.. புரியும்..!! கிரிக்கெட் வரலாற்றில் 21 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த அரிய சம்பவம்.. இதை பாருங்க.. புரியும்..!!

சிறப்பு

சிறப்பு

நேற்று நடந்த இந்த போட்டியில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. கெயில் பிடித்த கேட்ச். லிடோன் டாஸ் அடித்த ஹாட்ரிக் சிக்ஸ். ஷாகிப் அல் ஹசன் அடித்த செஞ்சுரி என்று பல விஷயங்களை சொல்லலாம். நேற்றைய போட்டி தொடர்பாக இதனால் நிறைய வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில் சரியான பார்மில் இல்லாத வங்கதேச வீரர் தமீம் இஃபால் இந்த போட்டியில் பார்மிற்கு திரும்பி 53 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்தார். இவர் மேற்கு இந்திய தீவுகள் வீரர் காட்றல் போட்ட பவுலிங்கில் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் அவுட்டான விதம்தான் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

எப்படி அவுட்டானார்

எப்படி அவுட்டானார்

காட்றல் போட்ட பந்தை பவுண்டரி அடிக்கத்தான் தமீம் முயற்சி செய்தார். ஆனால் சரியாக அந்த பந்து காட்றல் கையில் சிக்கியது. பந்து கைக்கு வந்ததும் கொஞ்சமும் யோசிக்காத காட்றல், அதை வேகமாக ஸ்டம்பை நோக்கி வீசி எறிந்தார். அங்கு தமீம் ஸ்டம்பை மறைத்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தார்.

ஆனால் அவுட்

ஆனால் பந்து அவரையும் மீறி உள்ளே சென்றது. சரியாக ஸ்டம்பை தாக்கியது. அதன்பின் 3வது நடுவர் சோதித்து பார்த்துவிட்டு இதற்கு விக்கெட் கொடுத்தார். இந்த விக்கெட் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் விழுந்த சிறப்பான ரன் அவுட் இதுதான் என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, June 18, 2019, 15:12 [IST]
Other articles published on Jun 18, 2019
English summary
ICC World Cup 2019: West Indies player took the best run out of the series against Bangladesh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X