For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு காயமே இல்லை.. வேண்டுமென்றே நீக்கிவிட்டார்கள்.. கதறி அழும் அதிரடி வீரர்.. அதிர்ச்சி சம்பவம்!

லண்டன்: ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் முகமது ஷாஷாத் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பின் பெரிய சூழ்ச்சி இருப்பதாக செய்திகள் வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும்.

அந்த அணி வரிசையாக தோல்வியை தழுவினாலும், முன்பை விட இந்த முறை நன்றாகவே விளையாடுகிறது.

ஆப்கானிஸ்தான் வீரர்

ஆப்கானிஸ்தான் வீரர்

ஆப்கானிஸ்தான் அணியில் அதிரடியாக ஆட கூடிய வீரர்கள் மிகவும் குறைவு. அந்த அணியில் மூன்று முக்கிய வீரர்கள்தான் தற்போது உலகம் முழுக்க வைரலாக இருகிறார்கள். அதில் ஒருவர் ரஷீத் கான், இன்னொருவர் முஜீப் உர் ரகுமான். இவர்கள் இருவரும் ஐபிஎல் மூலம் வைரலானவர்கள்.

இன்னொரு வீரர்கள்

இன்னொரு வீரர்கள்

இவர்கள் இல்லாமல் ஆப்கானிஸ்தானின் விக்கெட் கீப்பர் முகமது ஷாஷாத் உலகம் முழுக்க பலருக்கும் தெரிந்த வீரர். இவரின் குண்டான உடம்பு காரணமாக முதலில் வைரலானார். ஆனால் போக போக நான் குண்டு அல்ல அணு குண்டு என்பதை தனது பேட்டிங் மூலம் நிரூபித்தார். ஆம் மிகவும் அதிரடியாக ஆட கூடிய நபர் இவர்.

அதிகம்

அதிகம்

சென்ற வருடம் ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக ஸ்கோர் எடுத்த வீரர் ஷாஷாத் தான். இவரின் ஆட்டம் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளின் வீரர்களுக்கு இணையானதாக இருக்கும். அதேபோல் இவரின் கீப்பிங்கும் பெரிய அளவில் வைரலான கீப்பிங்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர் இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து திடீர் என்று நீக்கப்பட்டார். ஆப்கான் அணி வரிசையாக தோல்வி அடைந்தாலும், ஷாஷாத் நன்றாகவே ஆடி வந்தார். ஆனால் அவரை அணியில் இருந்து அணி நிர்வாகம் நீக்கியது. அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வந்தது.

காயம் என்ன

காயம் என்ன

ஆம், ஷாஷாத் காயம் பட்டு அவதிப்படுகிறார். அதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வந்தது. ஆனால் அது பொய் என்று தற்போது தகவல்கள் வருகிறது. ஷாஷாத் காலில் எந்த காயமும் ஏற்படவில்லை. அவரை வேண்டும் என்றே அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இதில் பெரிய சூழ்ச்சி உள்ளது என்கிறார்கள்.

என்ன சூழ்ச்சி

ஆப்கான் அணியில் அரசியல் ரீதியாக நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இதனால் அந்நாட்டு அணி தேர்விலும் நிறைய குளறுபடி நடக்கிறது. இதனால்தான் ஷாஷாத் நீக்கப்பட்டு இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இது தொடர்பாக ஷாஷாத் கண்ணீர்விட்டு அழும் வீடியோ ஒன்றும் உறுதிப்படுத்தப்படாமல் இணையம் முழுக்க வெளியாகி வைரலாகி உள்ளது.

மறுப்பு தெரிவிப்பு

மறுப்பு தெரிவிப்பு

ஆனால் ஆப்கான் அணி நிர்வாகம் இதை மருத்துள்ளது. ஷாஷாத் காலில் காயம் பட்டுள்ளது. இதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அதனால்தான் அவர் நீக்கப்பட்டு இருக்கிறார் என்று பேட்டியளித்துள்ளனர்.

Story first published: Sunday, June 9, 2019, 11:49 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
ICC World Cup 2019: What actually happens to Afghanistan wicket keeper Mohammad Shahzad?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X