For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேண்டாம்.. காயம்பட்ட போதும் கூட தண்ணீர் குடிக்கவில்லை.. ஹாசிம் அம்லாவிற்கு நேற்று என்ன நடந்தது?

நேற்று இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லா செய்த செயல் ஒன்று அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.

Recommended Video

ICC World Cup 2019: Hasim Amla: ஹாசிம் அம்லாவிற்கு நேற்று என்ன நடந்தது?- வீடியோ

லண்டன்: நேற்று இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லா செய்த செயல் ஒன்று அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.

1
43644

உலகக் கோப்பை தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று இங்கிலாந்திற்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கும் இடையில் போட்டி நடந்தது.

லண்டன் ஓவல் மைதானத்தில் மாலை 3 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பவுலிங் செய்ய தீர்மானித்தது.

 நல்ல பேட்டிங்

நல்ல பேட்டிங்

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்து இருந்தது. இம்ரான் தாஹிர் போட்ட முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே இங்கிலாந்து அணி தனது ஜானி பிரைஸ்டோ விக்கெட்டை இழந்தது. ஆனால் அதன்பின் இங்கிலாந்து அணி சுதாரித்துக் கொண்டது. அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் எல்லோரும் மிகவும் நிதானமாக ஆடினார்கள்.

 செம பாஸ்

செம பாஸ்

தென்னாப்பிரிக்க பவுலர்கள் ரன் கொடுத்தாலும் அவ்வப்போது பார்ட்னர்ஷிப்பை உடைத்து விக்கெட்டுகளை எடுத்து வந்தனர். ஆனால் வரிசையாக இங்கிலாந்து வீரர்கள் அரை சதங்களை கடந்து விளையாடி வந்தனர். ஜேசன் ராய், ரூட், மார்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அரை சதங்களை கடந்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 311 ரன்களை எடுத்தது.

என்ன நடந்தது

அதன்பின் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது. டி காக் நிதானமாக ஆடி வந்தார். ஆனால் ஹாசிம் அம்லா களமிறங்கிய வேகத்தில் காயம் பட்டார். ஜோஃப்ரா ஆர்ச்சர் போட்ட பந்தில் காயம் பட்ட அவர் பெவிலியன் திரும்பினார். அதன்பின் அவர் களமிறங்குவது சந்தேகம்தான் என்று கூறினார்கள்.

காயத்துடன்

காயத்துடன்

அவர் காயம் பட்ட நேரத்தில், அணியின் மருத்துவ குழு அவரை சோதனை செய்ய வந்தது. கையில் ஏற்பட்டு இருந்த அவரின் காயத்தை சோதித்து பார்த்தனர். அப்போது அவருக்கு மருத்துவர் தண்ணீர் கொடுத்தார். ஆனால் அம்லா அதை குடிக்க மறுத்துவிட்டார். அதேபோல் ஜூஸ், பிஸ்கெட் என்று அவர் எதையும் சாப்பிடவில்லை.

 ஏன் அப்படி

ஏன் அப்படி

இது ரம்ஜான் மாதம். இஸ்லாமியர்கள் நோன்பு இருக்க கூடிய மாதம். இதனால் இந்த மாதத்தில், அவரும் நோன்பு இருக்கிறார். இதனால் தான் நேற்று மருத்துவர் தண்ணீர் கொடுத்த போது கூட அதை வேண்டாம் என்று கூறி அம்லா மறுத்து இருக்கிறார்.

ஆடவில்லை

ஆனால் அதன்பின் அம்லா பெவிலியன் சென்றுவிட்டு பின் 35 ஓவர்கள் முடிந்த பின்தான் வந்தார். ஆனால் வந்த வேகத்தில் 13 ரன்களில் பிளாங்கெட் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

Story first published: Friday, May 31, 2019, 11:08 [IST]
Other articles published on May 31, 2019
English summary
ICC World Cup 2019: What happened to Hasim Amla during yesterday match against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X