For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

1250 அடியில் இருந்து குதித்த தல.. தோனியின் பாலிடான் கிளவுஸிற்கு பின் இருக்கும் அதிர வைக்கும் உண்மை!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பயன்படுத்திய கிளவுஸிற்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது.

லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பயன்படுத்திய கிளவுஸிற்கு பின் பெரிய வரலாறு இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கிரிக்கெட் மட்டுமில்லாமல் வேறு சில விஷயங்களிலும் அதிகம் கவனம் செலுத்த கூடியவர். தன்னுடைய செவன் என்ற ஸ்போர்ட்ஸ் பிராண்ட் மூலம் இவர் சிறந்த பிசினஸ் மேனாக இருக்கிறார்.

அதேபோல்தான் கால்பந்து போட்டியிலும் இவர் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது எல்லாம் போக இந்திய ராணுவத்திலும் சிறப்பு பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

கொடுத்து விடாதீர்கள் தோனி.. நடப்பது நடக்கட்டும்.. ஐசிசிக்கு எதிராக ரசிகர்கள் கோபம்.. பின்னணி என்ன? கொடுத்து விடாதீர்கள் தோனி.. நடப்பது நடக்கட்டும்.. ஐசிசிக்கு எதிராக ரசிகர்கள் கோபம்.. பின்னணி என்ன?

என்ன பொறுப்பு

என்ன பொறுப்பு

2011ல் உலகக் கோப்பை வென்ற கையோடு இந்திய ராணுவத்தில் தோனிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. பாராசூட் படை பிரிவில் 2011ல் இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இது அவரின் ரசிகர்களை பெரிய உற்சாகத்திற்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் இருந்து அவர் மிலிட்டரி உடையில் கிளவுஸ் அணிய ஆரம்பித்தார்.

பொறுப்பு

பொறுப்பு

அதன்பின் இவர் பாராசூட் படை பிரிவில் வெறும் சிறப்பு லெப்டினன்ட் கர்னலாக மட்டுமில்லாமல் அதில் சென்று பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். ஆம் ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். கிரிக்கெட் உடை, சிஎஸ்கே உடையை தவிர்த்து இவர் ராணுவ உடைகளை அதிகம் உடுத்தி இருக்கிறார்.

சூப்பர் பயிற்சி

சூப்பர் பயிற்சி

அதன்பின் இவர் 2015ல் பாராசூட் படை பிரிவில் முக்கியமான பாராசூட் பயிற்சியை மேற்கொண்டார். அதன்படி இவர் பாராசூட் உதவியுடன் ஹெலிகாப்டரில் இருந்து 1250 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார். இந்த பயிற்சியை முக்கிய ராணுவ வீரர்கள் மட்டுமே செய்வார்கள். தோனி இதை வெற்றிகரமாக செய்து முடித்தார்.

அளித்தார்கள்

இந்த பயிற்சியை பெறுபவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பாலிடான் சின்னம் என்ற சிறப்பு சின்னம் அளிக்கப்படும். இந்த சின்னம் தோனிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. அவரின் பயிற்சியை கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு வாய்ந்த பேட்ச் ராணுவம் மூலம் வழங்கப்பட்டது.

செம பாஸ்

இது போன்ற வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் தோனி, பாலிடான் பேட்ச்சை தனது கிளவுஸிற்கும் கொண்டு வந்தார். ஆம் தனது கிளவுஸில் பாலிடான் பேட்ச் சின்னத்தை பிரிண்ட் செய்து பயன்படுத்தி வந்தார். கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக உலகக் கோப்பை போட்டியில் அதை பயன்படுத்தினார்.

கட்டாயம்

தற்போது அதைதான் நீக்கும்படி, ஐசிசி தோனிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது விதிமுறை மீறல் என்று ஐசிசி கூறியுள்ளது. இதை கவனிக்கும்படி பிசிசிஐக்கு ஐசிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தோனி பாலிடான் பேட்ச் இல்லாமல் களமிறங்கி வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Story first published: Friday, June 7, 2019, 12:50 [IST]
Other articles published on Jun 7, 2019
English summary
ICC World Cup 2019: What is the history behind Dhoni's Balidaan Gloves? - Here is the story.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X