For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உள்ளே சென்று கலங்கிய கோலி.. வெளியே வந்து கத்திய ரோஹித்.. ஆர்ப்பரித்து பொங்கிய மொத்த மைதானம்!

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று கடைசி நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய வைரலாகி உள்ளது.

Recommended Video

Indian team emotional moment தோல்வியை தொடர்ந்து இந்திய வீரர்கள் கண்ணீருடன் விடைபெற்றனர்

லண்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று கடைசி நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய வைரலாகி உள்ளது. ரோஹித் சர்மா செய்த செயலை கிரிக்கெட் ரசிகர்கள் பலர் பாராட்டி இருக்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறி உள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று உலகக் கோப்பை செமி பைனல் போட்டி நடைபெற்றது.

மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி நழுவ விட்டுள்ளது.

ஏன் இப்படி பண்ணுனீங்க.. வேகமாக இறங்கி வந்த கோலி.. ரவி சாஸ்திரியுடன் சண்டை.. அதிர வைக்கும் வீடியோ!ஏன் இப்படி பண்ணுனீங்க.. வேகமாக இறங்கி வந்த கோலி.. ரவி சாஸ்திரியுடன் சண்டை.. அதிர வைக்கும் வீடியோ!

என்ன செய்தார்

என்ன செய்தார்

இந்த தொடர் முழுக்க ரோஹித் சர்மா மிகவும் சிறப்பாக விளையாடினார். ஆனால் நேற்று ஒரே ஒரு போட்டியில் அவர் சொதப்பியது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நேற்று பெவிலியனில் அமர்ந்து இருந்த ரோஹித் தான் செய்த தவறை எண்ணி வருந்திக் கொண்டு இருந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்தியாவின் பக்கம் போட்டி கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிய போது ரோஹித்திற்கு ஆட்டத்தின் மீது நம்பிக்கை வந்தது. உடனே பெவிலியனின் பால்கனி ஓரம் வந்து நின்று இந்திய வீரர்களை சியர் செய்ய ஆரம்பித்தார். தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்தார்.

முக்கியமாக என்ன செய்தார்

முக்கியமாக ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது ரோஹித் சர்மா அவரை பார்த்து கையை தூக்கி நீ ஆடு என்பது போல சிக்னல் காட்டினார். அதிலும் உனக்கு பலம் இருக்கிறது. உன்னால் முடியும் என்பதை போல சிக்னல் காட்டினார். இதை பார்த்து ரசிகர்கள் கத்தி கூச்சல் போட்டனர்.

செம

செம

இந்திய அணியின் கேப்டன் கோலி 4 விக்கெட் விழுந்த உடனே முடங்கிப் போனார். அவரால், இந்திய அணி தோற்க போகிறது என்பதை கொஞ்சம் கூட ஏற்க முடியவில்லை. கோலியால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டும் வெளியே வர முடியவில்லை. இதனால் அவர் உள்ளே நீண்ட நேரம் தனியாக இருந்தார்.

நல்லது

நல்லது

இந்த நிலையில்தான் ரோஹித் சர்மா ஒரு நல்ல துணை கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். தலைவன் கலங்கினாலும், தளபதியாக இறங்கி வந்து வீரர்களை ஊக்கப்படுத்தினார். இவரின் இந்த செயல் இணையம் முழுக்க பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பலர் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Story first published: Thursday, July 11, 2019, 12:27 [IST]
Other articles published on Jul 11, 2019
English summary
ICC World Cup 2019: What Rohit did showed his captaincy skill in yesterday match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X