For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எத்தனை வருட கனவு இது.. கண் முன்னே நிகழும் அதிசயம்.. 7 கடல் தாண்டி இந்திய அணிக்கு கிடைத்த முத்து!

ஒவ்வொரு இந்திய ரசிகனின் பல வருட கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது.

Recommended Video

WORLD CUP 2019: IND VS BAN | 7 கடல் தாண்டி இந்திய அணிக்கு கிடைத்த முத்து!- வீடியோ

லண்டன்: ஒவ்வொரு இந்திய ரசிகனின் பல வருட கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் இப்படி ஒரு விஷயம் நடக்காதா என்று எல்லோரும் நினைத்த விஷயம் தற்போது நம் கண் முன் நடந்து கொண்டு இருக்கிறது.

80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு நிறைய கனவுகள் ஆசைகள் இருக்கும். பெரும்பாலான கனவுகள் மிகவும் சிறியதாக இருக்கும். 2கே கிட்ஸ்களுக்கு எளிதாக கிடைக்க கூடிய விஷயம் பெரும்பாலும் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைத்தது கிடையாது.

அப்படி ஒரு கனவுதான் எதிரணியை அச்சுறுத்தும் ஒரு இந்திய பாஸ்ட் பவுலர். ஆம் கிட்டத்தட்ட இந்தியா அணி உருவாக்கப்பட்டதில் இருந்தே இப்படி ஒரு நாளுக்காகத்தான் காத்து கொண்டு இருந்தது.

இந்தியன் டீம்.. இவங்களை பார்த்து கத்துக்குங்க.. தோற்றாலும் பாராட்டை பெற்ற வங்கதேசம்! இந்தியன் டீம்.. இவங்களை பார்த்து கத்துக்குங்க.. தோற்றாலும் பாராட்டை பெற்ற வங்கதேசம்!

மற்ற அணிகள்

மற்ற அணிகள்

உலகம் முழுக்க கிட்டத்தட்ட எல்லா அணிகளும் அதிவேகப்பந்து வீச்சாளர்களை பார்த்துவிட்டது. அக்தர், அக்ரம், பிரிட் லீ, மெக்ராத், ஸ்டெய்ன், பொல்லாக், ஷான் டெய்ட் போன்ற உலகையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். சாதாரணமாக 150+ வேகத்தில் இவர்கள் பந்துகளை வீசுவார்கள்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் இந்திய அணியில் அப்படி ஒரு பவுலருமே இருந்தது இல்லை. நினைத்த நேரத்தில் 145+ போட, நினைத்த நேரத்தில் மலிங்கா போல யார்க்கார் வீச இந்திய அணியில் பவுலர்கள் இருந்தது இல்லை. ஏன் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் தூங்கி எழுந்து வந்து பந்து வீசுகிறார்கள் என்று 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்கள் கேள்வி கேட்ட காலமும் இருக்கிறது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

அதேபோல் இந்திய அணியில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் வீரர் என்ற ஒருவரும் கூட இருந்தது இல்லை. கடைசி ஓவரில் 20 ரன்கள் கொடுக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் கூட இந்திய அணியில் இருந்து இருக்கிறார்கள். இத்தனை இன்னல்களை தாண்டி மலிங்கா, பிரட்லீ போல ஒரே ஒரு வீரர் இந்தியப் அணிக்கு கிடைக்க மாட்டாரா என்று பல ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தவம் இருந்து இருக்கிறார்கள்.

கிடைத்தார்

கிடைத்தார்

அப்படி நாம் நினைக்கும் போது நமக்கு கிடைத்த முத்துதான் பும்ரா. இந்த இளம் வயதில் 145+ பந்து வீசுவது மட்டுமல்ல, 6 பந்தில் ஆறுமே யார்க்கர் பந்துகளை போடுவதும் உலகையே இவரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. எந்த ஒரு நொடியிலும், எந்த மோசமான நிலையிலும் கூட இவரால் இந்திய அணியை தனது பவுலிங் மூலம் காக்க முடியும். நேற்றும் கூட அதுதான் நடந்தது.

கலவை

கலவை

இவரால் எப்போது வேண்டுமானாலும் ஸ்லோ பால் போட முடியும். தேவையான நேரத்தில் பவுன்சர் போட முடியும். மிக எளிதாக 148+ கிமீ வேகத்தில் பந்து வீச முடியும். மலிங்கா, அக்தர், பிரட்லீ ஆகியோரின் கலவையாக அணிக்குள் சேர்ந்து இருக்கிறார் இந்த குட்டி பியூட்டி பும்ரா. இவர் 90ஸ் கிட்ஸ்களின் கனவு நினைவான ஒரு தருணம். 90ஸ் கிட்ஸ்களுக்கும் 20கே கிட்ஸ்களுக்கும் ஒரு இணைப்பு பாலம்.. ஏ ஆர் ரஹ்மான் மாதிரி!

அப்படி எல்லாம் இல்லை

அப்படி எல்லாம் இல்லை

நம்பர் 1 ஒருநாள் அதிவேக பவுலர் ஒரு இந்தியர் என்று சொல்லும் போதே எவ்வளவு கர்வமாக இருக்கிறது. இதெல்லாம் 90ஸ் கிட்ஸ்கள் கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். பல வருட கிரிக்கெட் ரசிகர்களின் தவத்திற்கு கிடைத்த முத்து மணிதான் இந்த பும்ரா. இந்த இளம் வயதிலேயே இவர் பலரின் சாதனைகளை முறியடித்துவிட்டார்.

இன்னும் இருக்கிறது

இன்னும் இருக்கிறது

உலகிலேயே மிகவும் யுனிக்கான ராக்கெட் சைன்ஸ் அறிவியல் மூலம் பந்து வீசும் ஒரே நபர் பும்ராதான். இவர் கடந்து செல்ல இன்னும் நிறைய தூரம் இருக்கிறது. இவருக்கு இன்னும் சாதனை புரிய நிறைய வயதும் இருக்கிறது. இப்படி ஒரு பவுலர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் கோலி, ரோஹித் அணியில் இருக்கும் போதே வாய்ப்பு பெற்றதும் இந்திய அணி செய்த புண்ணியம்தான்.. பும்ரா 120 கோடி இந்தியர்களின் கண் முன் நிகழும் அதிசயம்!

Story first published: Wednesday, July 3, 2019, 11:38 [IST]
Other articles published on Jul 3, 2019
English summary
ICC World Cup 2019: Why Stun Gun Bumrah is a dream bowler of every 80's and 90's Kid?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X