For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதிர்காலத்தில் உதவும்.. இங்கிலாந்துக்கு எதிராக தோனி மெதுவாக ஆடியது ஏன்? இப்படி ஒரு காரணமா?

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்தாலும், அதன் மூலம் இந்திய அணிக்கு நன்மை ஒன்று நிகழ்ந்து இருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Recommended Video

WORLD CUP 2019 IND VS ENG | தோனி ஆட்டத்தை பார்த்து கடுப்பான ரசிகர்கள்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்தாலும், அதன் மூலம் இந்திய அணிக்கு நன்மை ஒன்று நிகழ்ந்து இருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்று இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையில் இன்று உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடக்கிறது. இந்த தொடரில் தோல்வியையே ருசிக்காமல் இருந்த இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது. அதன்பின் இந்தியா ஐம்பது ஓவரில் 306 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பொறுமை

பொறுமை

இங்கிலாந்து அணிக்கு எதிராக தோனி மற்றும் கேதார் ஜாதவ் மிகவும் பொறுமையாக ஆடினார்கள். இவர்களின் மெதுவான ஆட்டத்திற்கு நிறைய காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய அணி தோல்வி அடைய போகிறது என்று தெரிந்தேதான் இவர்கள் விளையாடினார்கள். ஆனால் அதிக ரன்கள் எடுத்து தோல்வி அடைய வேண்டும் விளையாடினார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

வீரர்கள்

வீரர்கள்

அதாவது இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் மிகவும் அதிரடியாக ஆடி, ஒருவேளை வேகமாக விக்கெட்டுகள் விழுந்து இருந்தால், சீக்கிரமாக, குறைந்த ரன்களில் தோல்வி அடைந்து இருக்கும். பெரும்பாலும் இந்திய அணி 290 ரன்களுக்கு முன்பாகவே அவுட்டாகி இருக்கவோ, தோல்வி அடைந்து இருக்கவோ வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்.

தோனி நிதானம்

தோனி நிதானம்

ஆனால் தோனி மற்றும் கேதாரின் நிதான ஆட்டம் காரணமாக இந்தியா 300+ ரன்களை எடுத்த பின்புதான் தோல்வி அடைந்தது. இதனால் இந்தியா 2 புள்ளிகளை இழந்தாலும், ரன் ரேட்டிற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. சரியான ரன் ரேட் மூலம் இந்தியா தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இது வரும் போட்டிகளில் இந்தியாவிற்கு உதவ போகிறது. தோல்வி அடைய போகிறோம் என்று தெரிந்த பின்பே இப்படி புத்திசாலிதனமாக விளையாடினார்கள் எனப்படுகிறது.

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

இதனால் இந்தியாவின் ரன் ரேட் பாதிக்கவில்லை. ஒருவேளை இந்தியா அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தால், அதாவது இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்தாலும் இந்த ரன் ரேட் காரணமாக இந்தியா செமி பைனலுக்கு செல்ல வாய்ப்புள்ளது. எப்படி என்றால் இந்தியா அணி இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக தோல்வி அடைந்தால் 4வது இடத்திற்கான போட்டி அதிகரிக்கும்.

எந்த இடம்

எந்த இடம்

4வது இடத்திற்கான போட்டி இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையே நடக்கும். அப்போது எந்த அணி அதிக ரன் ரேட் வைத்து இருக்கிறதோ அந்த அணிதான் செமி பைனலுக்கு செல்லும். இதனால் கடந்த போட்டியில் இந்தியா காப்பாற்றிக்கொண்ட ரன் ரேட் அப்போது சரியான நேரத்தில் உதவும். இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்தியா மெதுவாக ஆடியது.

என்ன உதவி

என்ன உதவி

இது கண்டிப்பாக வரும் போட்டிகளில் உதவ போகிறது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே பாகிஸ்தானை வெளியே அனுப்ப வேண்டும் என்றுதான் இந்தியா மோசமாக விளையாடியது என்று ஒரு தியரி சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 2, 2019, 14:02 [IST]
Other articles published on Jul 2, 2019
English summary
ICC World Cup 2019: Why Dhoni and Kedar did a good job with their slow innings against England?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X