For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்போது அகதிகள்.. இப்போது சாம்பியன்கள்.. வந்தேறிகளை வைத்து வரலாறு படைத்த இங்கிலாந்து!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றி மிக முக்கியமான ஒரு வெற்றியாக மாறியுள்ளது.

Recommended Video

Eoin morgan : நாங்க ஜெயிச்சது இப்படித் தான் உலக கோப்பை சாம்பியன் குறித்து இங்கிலாந்து கேப்டன்-வீடியோ

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றி மிக முக்கியமான ஒரு வெற்றியாக மாறியுள்ளது. பல உலக நாட்டு தலைவர்களுக்கு இது ஒரு பாடமாக மாறி இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் ''அகதிகளை நாட்டிற்கு உள்ளேயே சேர்க்க மாட்டேன்'' என்று கூறி வருகிறார். வெளிநாட்டு வந்தேறிகள் அமெரிக்கர்களின் வாய்ப்புகளை பறிக்கிறார்கள் என்கிறார். எப்போது மெக்சிகோ பார்டரில் சுவர் எழுப்பலாம் என்று திரிகிறார்.

இந்தியாவும் அப்படித்தான் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தொடங்கி வங்கதேச அகதிகள் பலரை மோசமாக நடத்தி வருகிறது. இலங்கையோ தமிழ் பூர்வ குடிகளை கனடாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் விரட்டுகிறது.

என்னங்க இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாம மேட்ச் நடத்துறீங்க? பொங்கி எழும் கிரிக்கெட் ரசிகர்கள்!என்னங்க இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாம மேட்ச் நடத்துறீங்க? பொங்கி எழும் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஒரு நாடு வெளிநாட்டு மக்களை தன் நாட்டிற்கு அழைத்தது. வரலாற்றில் பல கறைகளை சுமந்த, பல நாடுகளை அடிமைப்படுத்தி தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய இங்கிலாந்துதான் அந்த நாடு. வெளிநாட்டில் இருந்து தன் நாட்டிற்கு குடியேறும் மக்களை கொண்டாட தொடங்கியது இங்கிலாந்து. அந்த நிமிடத்தில் இருந்து அந்த நாட்டின் வரலாறு மாற தொடங்கியது.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

வெளிநாட்டு மக்களை அகதிகளாக பார்க்காமல் அவர்களை ''சோர்ஸாக'' பார்த்தது. அவர்களை வைத்து நாட்டை எப்படி முன்னேற்ற முடியும் என்று யோசித்தது. கனடா ஏற்கனவே இதில் வெற்றிபெற்று இருந்தது. அதே மாடலை இங்கிலாந்தும் பயன்படுத்த தொடங்கியது. ஆனால் அது குஜராத் மாடல் போல தோற்கவில்லை.. வெற்றிபெற்றது.. ஆம் அதுதான் தற்போது இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளது.

ஆம் எப்படி

ஆம் எப்படி

இங்கிலாந்து அணி என்பது வெறும் இங்கிலாந்து வீரர்களை மட்டும் கொண்ட அணி கிடையாது. அது பல தேசத்து வீரர்களை அரவணைத்து உருவாக்கப்பட்ட அணியாகும். உதாரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனே ஐரீஷ் நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டின் தேசிய அணிக்கு இன்னொரு நாட்டின் வீரர் கேப்டன்.. யோசித்து பாருங்கள்!

யார் எல்லாம்

யார் எல்லாம்

முக்கியமாக நேற்று நியூசிலாந்து பவுலர்களை தெறிக்கவிட்டு வெற்றியை நிலைநாட்டிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், அதே நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர்தான். அடில் ரஷீத், மெயின் அலி ஆகியோர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். ஜேசன் ராய், டாம் குரான் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர்கள்.

வேறு

வேறு

ஜானி பிரைஸ்டோ, ஜோ ரூட், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், பிளங்கட், மார்க் வுட், ஜேம்ஸ் பீன்ஸ், லியாம் தாசன் ஆகியோர் மட்டும்தான் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். கடைசி சூப்பர் ஓவரை வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் மேற்கு இந்திய தீவுகளை சேர்ந்தவர். இன்னும் 25 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

காரணம்

காரணம்

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். ஜோப்ரா ஆர்ச்சரை அணிக்குள் எடுப்பதற்காக அந்த அணி நிர்வாகம் பல ஆண்டு விதியையே மாற்றியது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு அவர்கள் நிர்வாகம் தங்கள் நாட்டு அணிக்கு நல்ல வீரர்களை தேர்வு செய்வதில் குறியாக இருக்கிறது.

ஐபிஎல் போல

ஐபிஎல் போல

சரியாக சொல்ல வேண்டும் என்றால், இங்கிலாந்து அணி தற்போது ஒரு ஐபிஎல் அணி போலத்தான் செயல்படுகிறது. உலகின் எந்த பகுதியை சேர்ந்தவர் என்றாலும், நன்றாக விளையாடினால், தங்கள் நாட்டிற்கு அழைத்துக் கொள்கிறது. பின் குடியுரிமை வழங்கி, பயிற்சி அளித்து கடைசியில் அணியிலும் சேர்த்துக் கொள்கிறது.

யார் அகதி

யார் அகதி

பல முக்கிய அரசியல் தலைவர்கள் அகதிகளை விரட்டி அடிக்கும் போது, இங்கிலாந்து அவர்களை வைத்தே உலகக் கோப்பையை வென்றுள்ளது. இங்கிலாந்தின் இந்த வெற்றி என்பது ஒரு நாட்டின் வெற்றி அல்ல.. அது பல தேசங்களின் வெற்றி..கால் வைக்க சொந்த மண் இல்லாமல் சுற்றும் நாடோடிகளின் வெற்றி.. முக்கியமாக அது கிரிக்கெட்டின் வெற்றி!!

Story first published: Monday, July 15, 2019, 15:04 [IST]
Other articles published on Jul 15, 2019
English summary
ICC World Cup 2019: Why England deserves this championship more than any team? - The real reason.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X