For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுதான் உன் நேரம்... ரோஹித் கொடுத்த அந்த சிக்னல்.. நியூஸி போட்டியில் ஏன் இப்படி நடந்தது தெரியுமா?

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா வீரர்களை பார்த்து கொடுத்த சிக்னல் பெரிய வைரலாகி உள்ளது.

லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா வீரர் ஒருவரை பார்த்து கொடுத்த சிக்னல் பெரிய வைரலாகி உள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கும் போட்டி தற்போது பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இந்தியாவிற்கு எதிராக 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை நியூசிலாந்து அணி அடித்தது. தற்போது அந்த இலக்கை நோக்கி இந்தியா திணறி திணறி ஆடி வருகிறது.

செம

செம

இந்திய பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் சொதப்பினாலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்தை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக ஜடேஜா மற்றும் தோனி இருவரும் போட்டியை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து கொண்டு உள்ளனர்.

என்ன அதிசயம்

என்ன அதிசயம்

இந்திய அணியில் ஜடேஜா மற்றும் தோனி இருவரும் ஜோடி போட்டு ஆட தொடங்கி உள்ளனர். முக்கியமாக ஜடேஜா 3 சிக்ஸர், 3 பவுண்டரி என்று அரை சதம் அடித்துள்ளார். இன்னொரு பக்கம் தோனி நிதானமாக ஆடி வருகிறார்.

ரோஹித் சிக்னல்

ரோஹித் சிக்னல்

இந்த நிலையில் ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது ரோஹித் சர்மா அவரை பார்த்து கையை தூக்கி நீ ஆடு என்பது போல சிக்னல் காட்டினார். அதிலும் உனக்கு பலம் இருக்கிறது. உன்னால் முடியும் என்பதை போல சிக்னல் காட்டினார். இதை பார்த்து ரசிகர்கள் கத்தி கூச்சல் போட்டனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

இதற்கு முன் மும்பையை சேர்ந்த வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சிரேக்கர் ரோஹித் சர்மாவை உயர்த்தி பேசி ஜடேஜாவை ''உதிரிகளின் வீரர்'' என்று கிண்டல் செய்து குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதற்கு ரோஹித் சர்மாவே தனது சிக்னல் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் என்கிறார்கள்.

Story first published: Wednesday, July 10, 2019, 19:09 [IST]
Other articles published on Jul 10, 2019
English summary
ICC World Cup 2019: Why Rohit Sharma gives a signal to Jadeja in the match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X