For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னதான் ஆச்சு இவருக்கு.. இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.. புதிய சர்ச்சையில் சிக்கிய தோனி.. பரபரப்பு!

இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி பேட்டிங் மட்டுமில்லாமல் இன்று புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார்.

Recommended Video

களத்தில் நிகழ்ந்த புதிய சர்ச்சை! இன்றும் அதே தவறை செய்தாரா தோனி ?

லண்டன்: இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி பேட்டிங் மட்டுமில்லாமல் இன்று புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார்.

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையில் நடக்கும் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பாதையை நோக்கி நகர்ந்து வருகிறது.

முதலில் தோல்வி முகம் கண்ட இந்தியா பவுலிங் மூலம் தப்பித்துள்ளது. இந்த பேட்ஸ்மேன்கள் விட்டதை பவுலர்கள் சரிக்கட்டி இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

மொத்தம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 72, பாண்டியா 46, தோனி 56 ரன்கள் எடுத்தனர். இப்போது அந்த இலக்கை நோக்கி மேற்கு இந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது. ஆனால் அந்த அணி 107 ரன்களுக்கே 7 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது.

தோனி பேட்டிங்

தோனி பேட்டிங்

இந்த போட்டியில் தோனி பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடக்கத்தில் இவர் நிதானமாக ஆடினாலும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். இதனால் தோனி 56 ரன்கள் எடுத்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இன்று அவர் கீப்பிங்கில் மோசமாக சொதப்பினார். வரிசையாக இரண்டு முறை பந்துகளை பிடிக்க முயன்று தோல்வி அடைந்தார். ஆனால் இதனால் அவர் விக்கெட் எதையும் மிஸ் செய்யவில்லை. அதே சமயம் தேவையில்லாமல் பைஸ் பவுண்டரி இரண்டை விட்டார்.

நெஞ்சில் வாங்கினார்

நெஞ்சில் வாங்கினார்

போட்டி முழுக்க அவர் பந்தை சரியாக கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கையில் பந்தை பிடிப்பதற்கு பதிலாக இரண்டு முறை நெஞ்சில் பந்தை வாங்கினார். இது பெரிய வைரலானது. அவர் இரண்டு முறை பவுண்டரி விட்டது பெரிய சர்ச்சையானது.

வேகம் இல்லை

வேகம் இல்லை

தோனியிடம் அந்த பழைய வேகம் காணாமல் போய்விட்டது என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். மின்னல் வேகத்தில் அவர் ஸ்டம்பிங் செய்வது இன்று இல்லை. அவரிடம் இன்று எதோ மிஸ்ஸாகிறது என்று பலர் விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.

Story first published: Thursday, June 27, 2019, 22:00 [IST]
Other articles published on Jun 27, 2019
English summary
ICC World Cup 2019: Why so slow? What happened to Dhoni today against WI?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X