For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடரும் புறக்கணிப்பு.. இனியும் வாய்ப்பில்லை என்றால் அவ்வளவுதான்.. கடும் வருத்தத்தில் இந்திய வீரர்!

இந்திய அணியில் மிக முக்கியமான வீரர் ஒருவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

லண்டன்: இந்திய அணியில் மிக முக்கியமான வீரர் ஒருவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். பல்வேறு போட்டிகளில் தனது திறமையை நிரூபித்தாலும் கூட அவருக்கு மட்டும் வாய்ப்பு என்பது எட்டா கனியாகவே இருக்கிறது.

இந்திய அணியில் தற்போது ஆடும் வீரர்களில் கொஞ்சம் மூத்த வீரர்கள் என்று பார்த்தால் மூன்று பேர்தான். ஒருவர் தோனி, இன்னொருவர் ரோஹித் சர்மா, இன்னொரு வீரர் தினேஷ் கார்த்திக். இதில் முதல் இரண்டு வீரர்களும் இந்திய அணியில் நிலையாக இடம் பிடித்து இருக்கிறார்கள்.

ஆனால் தினேஷ் கார்த்திக் நிலைமைதான் எப்போதும் ஊசலாட கூடியது. ஒரு காலத்தில் இந்திய அணியின் கேப்டன் ஆகும் வாய்ப்பு கூட இவருக்கு வந்தது. ஆனால் தற்போது அணியில் இடம் பிடிப்பதே கடும் சிரமமாக இருக்கிறது.

 வாய்ப்புள்ளது

வாய்ப்புள்ளது

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக லண்டன் சென்று இருக்கும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் இடம் பிடித்தார். தினேஷ் கார்த்திக்கா, ரிஷப் பண்டா என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், இந்திய அணிக்குள் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தார். இந்திய அணியின் இந்த முடிவை பலரும் பாராட்டி இருந்தார்கள் .

 ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் உலகக் கோப்பை போட்டி தொடங்கி, இந்தியா இதுவரை மூன்று போட்டிகளை விளையாடி முடித்துவிட்டது. இதில் ஒரு போட்டியிலும் தினேஷ் கார்த்திக்கு ஆடும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் முக்கியமான வீரர் ஒருவர் காயம் அடைந்த போதும் கூட தினேஷ் கார்த்திக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

தவான்

தவான்

தற்போது இந்திய அணியில் தவான் காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதில் விஜய் சங்கர் ஆடும் அணியில் இருக்கிறார். பெரும்பாலும் அவரின் இடத்தை அடுத்த போட்டியில் பண்ட் நிரப்புவார் என்று கூறுகிறார்கள். ஆனால் தினேஷ் கார்த்திக் லண்டனில் இருப்பதை யாராவது கவனித்தார்களா என்று கூட தெரியவில்லை. நல்ல ஹிட்டிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் லண்டனில் இருக்கும் போது ஏன் பண்ட் அழைக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 கவனம்

கவனம்

இந்திய அணி தேர்வு வாரியம் பண்ட் மீது அதிக கவனம் செலுத்துவதை பார்க்கையில் பெரும்பாலும் வருங்கால போட்டிகளில் அவருக்கே வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால் தினேஷ் கார்த்திக் இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியிலாவது விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதாஸ் கோப்பை, ஐபிஎல் போன்ற தொடர்களில் தன்னை நிரூபித்தும் கூட தினேஷ் கார்த்திக் பல்வேறு சூழ்நிலையால் வாய்ப்புகளை பெற முடியாமல் இருக்கிறார்.

 கண்டிப்பாக வருத்தம்

கண்டிப்பாக வருத்தம்

இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாத வருத்தம் கண்டிப்பாக தினேஷ் கார்த்திக்கிற்கு இருக்கத்தான் செய்யும். ஆனால் என்ன, அவரின் இடத்திற்கு நிறைய வீரர்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருவதால், வாய்ப்பு கிடைப்பது பெரிய கஷ்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 20, 2019, 10:46 [IST]
Other articles published on Jun 20, 2019
English summary
ICC World Cup 2019: Will he get a chance to prove him at least? The sad story of Dinesh Karthick.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X