For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுரேஷ் ரெய்னாவை விடுங்க.. சூடா "சமோசா" சாப்ட்டீங்களா?

மெல்போர்ன்: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ரோஹித் சர்மாவின் சதமும், சுரேஷ் ரெய்னாவின் அபார ஆட்டமும் மட்டும் நேற்று பெரிதாகப் பேசப்படவில்லை. மாறாக நம்ம ஊர் சமோசாவும் பிரபலமாகி விட்டது.

இது பாஸ்ட் புட் காலம்.. எல்லாமே பாஸ்ட்டுதான்.. ஃபீஸ்ட்டும் கூட. நம்ம ஊரைக் கலக்கும் சில உணவு வகைகள் இப்போது ஆஸ்திரேலியாவையும் அதகளம் செய்ய ஆரம்பித்துள்ளன.

மயிலாப்பூரில் சாப்பிடும் அதே சமோசாவை, மெல்போர்னிலும் சாப்பிட முடியும் இப்போது. நேற்று இந்தியா, வங்கதேசம் இடையிலான போட்டியின்போது பார்வையாளர்களுக்கு மத்தியில் சூடான சமோசாவை ஏந்தியபடி நடந்த விற்பனையைக் காண முடிந்தது.

முதல் முறையாக

முதல் முறையாக

மெல்போர்ன் மைதானத்தில் சமோசா விற்பனை நடப்பது இதுவே முதல் முறையாகும் என்று சமோசா விற்பனையாளர் ஒருவர் கூறினார்.

மொத்தம் 30 பேர் பாஸ்!

மொத்தம் 30 பேர் பாஸ்!

மொத்தம் 30 பேர் சமோசா விற்பனையில் நேற்று குதித்திருந்தனராம். கிட்டத்தட்ட வந்திருந்த அத்தனை இந்தியர்கள் வாயிலும் சமோசா இருந்திருக்கும் என்று கூறும் அளவுக்கு சமோசா விற்பனை கன ஜோராக இருந்ததாம்.

தென் ஆப்பிரிக்க போட்டியின்போது வந்த ஐடியா

தென் ஆப்பிரிக்க போட்டியின்போது வந்த ஐடியா

சமீபத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டிக்கு வந்திருந்த இந்தியர்களின் கூட்டத்தைப் பார்த்துத்தான் சமோசா விற்கும் ஐடியாவே பிறந்ததாம் இவர்களுக்கு. இதையடுத்து நேற்று இந்த சமோசா விற்பனையை அறிமுகப்படுத்தி விட்டனர். முதல் விற்பனையே அமோகமாக இருந்ததாம்.

போட்டதெல்லாம் பொசுக்குன்னு போயிருச்சே!

போட்டதெல்லாம் பொசுக்குன்னு போயிருச்சே!

போட்ட சமோசாவெல்லாம் பொசுக்கென்று விற்றுப் போய் விட்டதாம். இரண்டு சமோசாவின் விலை ஆஸ்திரேலிய டாலருக்கு 5.60.. அதாவது நம்ம ஊர் மதிப்பில் ரூ. 250 ஆகும். உருளைக் கிழங்கு சமோசா மட்டுமல்லாமல், சிக்கன் மற்றும் முட்டை சமோசாவும் இதே விலைதானாம்.

ஸாரி பாஸ் சட்னி கிடையாது!

ஸாரி பாஸ் சட்னி கிடையாது!

வெறும் சமோசா மட்டுமே விற்றுள்ளனர். தொட்டுக் கொள்ள சட்னி கூட கொடுக்கலையாம். இருந்தாலும் மக்கள் விடாமல் சமோசாவை வாங்கி வாயில் தள்ளியுள்ளனர்.

பிரமாதம்ய்யா!

Story first published: Friday, March 20, 2015, 16:05 [IST]
Other articles published on Mar 20, 2015
English summary
It's amazing to what extent suppliers will go to meet the demand in today's ever so competitive world of fast food. Yesterday at the Melbourne Cricket Ground, vendors were seen strolling the stands selling samosas. One of the salesmen later told mid-day that this is the first time that one of India's favourite snacks has been included in the menu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X