For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் சாம்பியன்ஷிப்-ன் பரிசுத்தொகை.. படைக்கப்பட்ட சாதனைகள்.. மிரளவைக்கும் புள்ளிவிவரங்கள் - விவரம்

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முக்கிய சாதனைகள், பரிசுத் தொகை, புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது.

 மன அழுத்தம்.. ஒவ்வொரு நொடியும் மன அழுத்தம்.. ஒவ்வொரு நொடியும்

144 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பையை வென்று நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.

வெற்றியாளர்கள்

வெற்றியாளர்கள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பையை வென்ற நியூசிலாந்து அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.12 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இறுதி வரை வந்து தோல்வியை சந்தித்த இந்திய அணி ரூ.6 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கெயில் ஜேமிசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்.

பேட்டிங்

பேட்டிங்

இந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபஸ்சேங் முதலிடம் வகிக்கிறார். 13 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1,675 ரன்களை விளாசியுள்ளார். இதில் 5 சதங்களும், 9 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோராக ஒரு போட்டியில் 215 ரன்களை விளாசினார். இந்த பட்டியலில் இந்திய வீரர் ரஹானே 5வது இடத்தை பிடித்துள்ளார். 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 1,159 ரன்களை அடித்துள்ளார். இதில் 3 சதங்களும், 6 அரைசதங்களும் அடங்கும். அவர் அதிகபட்சமாக 115 ரன்களை ஒரு போட்டியில் அடித்துள்ளார்.

பவுலிங் பட்டியல்

பவுலிங் பட்டியல்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் லெக் ஸ்பின்னர் அஸ்வின் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 71 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இறுதிப்போட்டியில் கூட 4 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த தொடரில் 4 முறை 5 விக்கெட் ஹௌல் ( ஒரே போட்டியில் 5 விக்கெட் எடுப்பது) எடுத்து அசத்தியுள்ளார்.

முதல் வீரர்கள்

முதல் வீரர்கள்

ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களின் இறுதிப்போட்டிகளில் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார். நியூசிலாந்துடனான இறுதிப்போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 76 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதே போல டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த முதல் வீரராக கெயில் ஜேமிசனும், முதல் அரை சதம் அடித்த வீரராக டேவன் கான்வேவும் இடம்பிடித்துள்ளனர்.

Story first published: Thursday, June 24, 2021, 21:36 [IST]
Other articles published on Jun 24, 2021
English summary
Here is the ICC World Test Championship: Full List Of Award Winners, Prize Money, Records And Statistics
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X