“ஒரே அசிங்கமா போச்சே குமாரு”.. இங்கிலாந்தை பங்கம் செய்த ஐஸ்லாந்து வாரியம்.. காரணம் இந்தியா தான்!!

சென்னை: இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்துவதாக கூறிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தரமான பதிலடி கொடுத்துள்ளது.

Recommended Video

T20 Worldcupக்காக காயத்தில் இருந்து மீண்டு வந்த Marsh, Stoinis, Starc!

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு எந்தவொரு தனிப்பட்ட தொடர்களும் விளையாடவில்லை.

ஐசிசி தொடர்களில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மோதிக்கொண்ட போதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே இல்லை.

3 அதிரடி மாற்றங்கள்.. தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டி.. ப்ளேயிங் 11ல் ரோகித் மாஸ் முடிவு! 3 அதிரடி மாற்றங்கள்.. தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டி.. ப்ளேயிங் 11ல் ரோகித் மாஸ் முடிவு!

இந்தியா - பாக். தொடர்

இந்தியா - பாக். தொடர்

ரசிகர்களின் இந்த குறையை தீர்க்க தான் இங்கிலாந்து வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது இந்தியா - பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடரை இங்கிலாந்து நடத்த தயாராக இருப்பதாக கூறினார். மேலும் இதற்கு எந்தவித நிபந்தனையும் இல்லை என விளக்கம் அளித்தது. இதற்கு பாகிஸ்தான் மகிழ்ச்சியடைந்த போதும், இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை.

ஐஸ்லாந்து ட்வீட்

ஐஸ்லாந்து ட்வீட்

இந்நிலையில் இங்கிலாந்து வாரியத்தை ஐஸ்லாந்து வாரியம் வச்சு செய்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்நாட்டு வாரியம், " இங்கிலாந்து கோரிக்கையை அறிந்தோம். ஐஸ்லாந்தும் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த விரும்புகிறோம். இங்கு வந்தால் ஜூன் - ஜூலை மாதங்களில் 24 மணி நேர சூரிய வெளிச்சத்தை கொடுக்கிறோம் என கூறியுள்ளது. அதாவது இங்கிலாந்தில் ஜூன் - ஜூலை மாதங்களில் சரியான வெளிச்சமும், வானிலையும் இருக்காது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

டாஸே இல்லை

டாஸே இல்லை

மேலும், இங்கு டாஸிற்கு பதிலாக இரு அணி கேப்டன்களும் கத்திச்சண்டை போட்டு , அதில் வெற்றியாளரை தேர்வு செய்யலாம் எனக்குறிப்பிட்டுள்ளனர். அதாவது இங்கிலாந்தில் "ஸ்வார்ட் ஜாஸ்ட்" எனும் கத்திச்சண்டை மிகவும் பிரபலம். எனவே அதனை கிண்டலடிக்கும் வகையில் கூறியுள்ளனர். இதே போல சாதாரண பாதுகாப்பு இல்லாமல் ஸ்னைப்பர்களுடன் கூடிய பாதுகாவலர்கள் இருப்பார்கள் என வேடிக்கையாக கூறியுள்ளது.

ஆஷஸும் தப்பவில்லை

ஆஷஸும் தப்பவில்லை

இதற்கெல்லாம் ஒருபடி மேல் சென்ற ஐஸ்லாந்து கிரிக்கெட், இங்கிலாந்தின் பெருமை மிகு ஆஷஸ் தொடரையும் கிண்டலடித்துள்ளது. அதாவது, " 3 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரை "வோல்கானிக் ஆஷஸ் டிராபி" என அழைக்கலாம், புதிதாக ஒரு தொடரை உருவாக்கலாம் எனவும் கூறியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் சிரிப்பலையில் ஆழ்ந்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Iceland Cricket hillariously Trolls ECB after it Offer to Host IND vs PAK Test Series in mutual ground
Story first published: Wednesday, September 28, 2022, 18:20 [IST]
Other articles published on Sep 28, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X